இன்று பிற்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்தம் 91 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 55, 838க்கு அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள். அறுவர் வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி சிங்கப்பூருக்கு வந்தவர்களாவர். அவர்கள் அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சமூகத்தில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

