சுற்றுலாவுக்கு ஊக்கம்: சிங்கப்பூரர்களுக்கு $320 மி. பற்றுச்சீட்டு

சுற்றுலாவுக்கு ஊக்கம்: சிங்கப்பூரர்களுக்கு $320 மி. பற்றுச்சீட்டு

2 mins read
2429f8ac-3f77-4b99-a6cb-1e5df3d5b140
கோப்புப்படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

உள்­ளூ­ரில் தொழில்­கள் தலை­தூக்கு­வ­தற்கு உத­வும் ஓர் இயக்­கத்­தின் பகு­தி­யாக சிங்­கப்­பூ­ரர்­களுக்கு 'சுற்­றுலா ஊக்­கத்­தொகை' என்ற வடி­வில் $320 மில்­லி­யன் கிடைக்கவிருக்­கிறது. அந்­தத் தொகையை அவர்­கள் உள்­நாட்­டில் செல­விட முடி­யும்.

'சிங்­கப்­பூரை மீண்­டும் கண்­டறி­வ­தற்­கான பற்­றுச்­சீட்­டு­கள்' என்று அந்தத்தொகை குறிப்­பி­டப்­ப­டும்.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் உண­வ­கங்­கள், கடை­கள், ஹோட்­டல்­கள், உல்­லாச இடங்­கள் ஆகி­ய­வற்­றில் மக்­கள் செல­வி­டு­வதை ஊக்­கு­விப்­பதற்­காக சென்ற மாதம் $45 மில்­லி­யன் இயக்­கம் ஒன்று தொடங்­கப்­பட்­டது.

செல­வின ஊக்­கு­விப்­பு­களும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு மேலும் ஏழு மாதம் கிடைக்­க­வி­ருக்­கும் சம்­பள மானி­ய­மும் சுற்­று­லாத் துறைக்கு மேலும் ஆத­ரவு அளிப்­ப­தற்­காக இடம்­பெ­றும் நட­வ­டிக்­கை­களும் முக்­கி­ய­மா­ன­வையாகும்.

கொவிட்-19 கார­ண­மாக நடப்புக்கு வந்­துள்ள பயணக் கட்­டுப்­பா­டு­க­ளால் சிங்கப்பூருக்கு வெளி­நாட்­டி­னர் வருகை அறவே இல்­லாத நிலை ஏற்­பட்டு இருக்­கிறது என்­பதை தன்­னு­டைய அமைச்­சர்நிலை அறிக்­கை­யில் துணைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

பல சிங்­கப்­பூ­ரர்­கள் பய­ணம் செய்ய விரும்­பு­கி­றார்­கள். ஆனால் முடி­ய­வில்லை. அவர்­கள் வெளி­நாடு­க­ளுக்­குச் செல்­லும்­போது செல­வி­டும் அள­வுக்கு சிங்­கப்­பூ­ரில் செல­வி­டு­வார்­கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது என்­றா­லும் புதிய வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்கொண்டு சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­நாட்­டின் கலா­சா­ரம், பாரம்­ப­ரி­யம், இயற்கை, கலை­கள், கட்­ட­டக் கலை முத­லான பல­வற்­றை­யும் கண்­ட­றி­வார்­கள் என்று நம்­பு­வ­தாக திரு ஹெங் கூறினார்.

பற்­றுச்­சீட்­டு­கள் பற்­றிய மேல் விவ­ரங்­கள் அடுத்த மாதம் வெளி­யி­டப்­படும் என்று அவர் கூறி­னார்.

கலை, கலா­சார விளை­யாட்டு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களுக்கு மேலும் உதவி கிடைக்­கக்­கூ­டும் என்­றார் அவர். பல ஆண்டு கால­மாக நாம் பலப்­ப­டுத்தி வந்­துள்ள மூலா­தார ஆற்­ற­லைக் கட்­டிக்­காக்­கும் வகை­யில் மேலும் ஆத­ரவை வழங்க தான் ஆயத்­த­மாக இருப்­ப­தா­க­வும் கலா­சார, சமூக இளை­யர் துறை அமைச்­சு­டன் சேர்ந்து இதனை தாம் செய்யப்­போ­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இரவு நேர உல்­லாச தொழில்­து­றை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­களுக்கு உத­வு­வ­தன் தொடர்­பில் வர்த்­தக தொழில் அமைச்சு மேல் விவ­ரங்­களை வெளி­யி­டும்.