மசெகவின் கொறடாவாக ஜனில் புதுச்சேரி

மசெகவின் கொறடாவாக ஜனில் புதுச்சேரி

2 mins read
3b5ab734-fed1-45e7-a22a-ac5905db1952
மக்கள் செயல் கட்சிக் கொறடாவாக டாக்டர் ஜனில் புதுச்சேரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். -

மக்கள் செயல் கட்சிக் கொறடாவாக டாக்டர் ஜனில் புதுச்சேரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைக் கொறடாவாக திருவாட்டி சிம் ஆன் தொடர்ந்து செயல்படுவார் என்று மக்கள் செயல் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

சுகாதாரம், தொடர்பு, தகவல் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சராகவும் பாசிர் ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள டாக்டர் ஜனில், கட்சிக் கொறடாவாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

திருவாட்டி சிம், தேசிய வளர்ச்சி, தொடர்பு, தகவல் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சராகவும் ஹாலந்து -புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

கட்சி கொறாடாவின் பங்கு, கட்சிக்கிடையே சிறந்த தகவல்தொடர்புகளை உறுதி செய்வதும், அதன் நாடாளுமன்ற செயல்பாட்டை சீராக நடத்துவதற்கும், கட்டொழுங்கு காப்பாளராகச் செயல்படுவதும் ஆகும்.

அத்துடன், அரசாங்க நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் செயல் கட்சி மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்காப்பு மற்றும் வெளியுறவு, நிதி மற்றும் வர்த்தக தொழில், சமுதாய குடும்ப மேம்பாடு ஆகிய மூன்று தவிர, கிட்டத்தட்ட 12 குழுக்களும் புதிய தலைவர்களைக் கொண்டுள்ளன.

இந்த மூன்று குழுக்களும் முறையே செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்; புக்கிட் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியங் எங் ஹுவா, மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சியா கியான் பெங் ஆகியோர் தலைமை தாங்குவார்

கடந்த 1987ஆம் ஆண்டில் மக்கள் செயல் கட்சியால் தொடங்கப்பட்ட இந்த நாடாளுமன்றக் குழுக்கள், அரசாங்கக் கொள்கைகளைப் பற்றிய கருத்துகளை, மக்களின் பிரதிநிதியாக அரசாங்கத்திடம் வழங்க வகைசெய்கின்றன.