வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பைப் பெற ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் சம்பளத்தை மனிதவள அமைச்சிடம் பொய்யாக உயர்த்திக் காட்டிய 7ஸ்டார் உணவகத்துக்கு $52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது நான்கு ஊழியர்களின் சம்பளம் குறித்து மனிதவள அமைச்சுக்கு பொய்யான தகவலை அனுப்பி வைத்ததை அந்த உணவகம் ஒப்புக்கொண்டது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தும் வாய்ப்பைப் பெற தேவையான குறைந்தபட்ச சம்பள நிபந்தனையைப் பற்றி 7ஸ்டார் உணவகத்தின் இயக்குநர் திரு சுப்பிரமணியன் திருப்பதி ராஜ்ஜுக்குத் (படம்) தெரியும் என்று மனிதவ அமைச்சு கூறியது.
பொய்க் கணக்கு காட்ட உயர்த்தப்பட்ட தொகையுடனான காசோலையை ஊழியர்களுக்கு திரு ராஜ் மாதந்தோறும் தந்தார்.
ஆனால் உண்மையான சம்பளத்துக்கும் அதற்கும் உள்ள வித்தியாசத்தை ஊழியர்கள் அவருக்குத் திருப்பித் தந்தனர்.

