'துடிப்புள்ள நிறுவனங்கள் நெருக்கடிநிலையிலும் வளரும்'

1 mins read
eec54aeb-c744-429c-a7b0-5a4e1b34eb67
கோப்புப்படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

துடிப்புள்ள, புத்தாக்கத்துடன் செயல்படும் நிறுவனங்களால் நெருக்கடிநிலையின்போதும் வளர்ச்சி காண முடியும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

ஃபோர்ஃபிரண்ட் மருத்துவத் தொழில்நுட்பம் எனும் துல்லிய பொறியியல் நிறுவனத்தைப் பார்வையிட்ட பிறகு இக்கருத்தை அவர் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

கொரோனா கிருமித்தொற்று பிரச்சினை தலைதூக்குவதற்கு முன்பே அது புத்தாக்கத்தைக் கையாண்டது. முதலில் மருத்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்திய இந்நிறுவனம், தானியக்க திறன்களை மேம்படுத்துதல், உள்ளூர்வாசிகளை வேலையில் அமர்த்துதல் போன்றவற்றில் ஈடுபட்டது.

கொரோனா கிருமித்தொற்றால் நெருக்கடிநிலை ஏற்பட்டதும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கான சாதனங்களை உற்பத்தி செய்ய அது தொடங்கியது.

உற்பத்தி அதிகரித்ததால் கூடுதலாக 80 பேரை அது வேலையில் அமர்த்தியது.

"நெருக்கடிநிலையிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஃபோர்ஃபிரண்ட் மருத்துவத் தொழில்நுட்பத்தைப் போலவே மற்ற நிறுவனங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன, வேலைக்கு ஆட்களை எடுக்கின்றன.

"உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மூப்படைந்த ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கவும் இந்த நிறுவனங்

களுக்கு வேலை வளர்ச்சித் திட்டம் கைகொடுக்கும்," என்றார் திரு ஹெங்.