தேசிய பராமரிப்பு அவசர சேவை நேரம் குறைக்கப்படுகிறது

தேசிய பராமரிப்பு அவசர சேவை நேரம் குறைக்கப்படுகிறது

2 mins read
44898d4a-153f-4430-b863-7db946b44484
-

கொரோனா கிருமி தொற்றுநோய் பரவல் காலத்தில் மக்களுக்கு உளவியல் மற்றும் உணர்வுரீதியான ஆதரவை வழங்க ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட தேசிய பராமரிப்பு அவசர சேவை செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரம் இயங்காது.

நள்ளிரவு நேர அழைப்புகள் குறைந்துவிட்டால், இச்சேவை நேரம் குறைப்படுவதாக சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிப்ளி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கிருமிப் பரவல் முறியடிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை காலத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து தேசிய பராமரிப்பு அவசர சேவை எண்ணுக்கு 27,900க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன.

ஜூன் மாதத் தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதும் அழைப்புகளின் எண்ணிக்கை சுமார் 42 விழுக்காடு குறைந்த என்று அவர் கூறினார்.

நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளும் குறைந்துவிட்டன.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை தேசிய பராமரிப்பு அவசர சேவை செயல்படும் என்று திரு மசகோஸ் கூறினார்.

அவசர சேவை அழைப்பை நிர்வகிக்கும் ஏறக்குறைய 900 தொண்டூழியர்களில் சிலர் பொருளியல் மீண்டும் செயல்படத் தொடங்கிய இரண்டாம் கட்டத் தளர்வின்போது வேலை மற்றும் மற்றக் கடமைகளை மீண்டும் ஈடுபடத்தொடங்கியுள்ளதால், முன்பு போல பல்வேறு வேலை நேரங்களில் அவர்களால் செயல்படமுடியவில்லை.

"மாற்றப்பட்ட சேவை நேரம், அழைப்பவர்களின் பெரும்பாலான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்ய உதவுவதுடன், தொண்டூழியர்களின் சேவையையும் முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது" என்றார் அமைச்சர் மசகோஸ்.

நள்ளிரவுக்குப் பிறகு ஆதரவு தேவைப்படுபவர்கள், அவசர சேவைக்கு அழைத்தால் குரல் பதிவு அவர்களுக்கு வழிகாட்டும். மனநல மருத்துவக் கழகத்தின் உதவி எண், சிங்கப்பூர் அபய ஆலோ-சனை சங்-கத்-தின் (எஸ்-ஓ-எஸ்) அவசர சேவை போன்ற 24 மணி சேர அவசர சேவை அழைப்புகளுக்கு வழிகாட்டும்.

இந்த தேசிய பராமரிப்பு அவசர சேவைக்கு அழைத்த பொது மக்களுக்கு தன்னலமற்று, உளவியல் மற்றும் உணர்வுரீதியான ஆதரவை வழங்கிய தொண்டூழியர்களையும் அமைச்சர் பாராட்டினார்.

அழைப்பவர்களில் பெரும்பாலோர் 21 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் என்றும் அவர்களின் முக்கிய கவலைகள் மன நலன், திருமண மற்றும் குடும்ப தகராறுகள் தொடர்பானவை என்றும் அவர் கூறினார்.

"விரக்தியும் மனச்சோர்வுமடைந்த பலருக்கு உதவி நல்கிய தொண்டூழியர்களின் அர்ப்பணிப்புக்கும் விலைமதிப்பற்ற திறன்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனைய வழிகளில் ஆதரவை வழங்கிய சமூக சேவை சமூகத்திற்கும் சமூகப் பங்காளிகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று அமைச்சர் கூறினார்.

பராமரிப்பு அவசர சேவை தொண்டூழியர்களை இன்னும் சேர்த்துக்கொள்கிறது. நெருக்கடி காலத்தில் உதவும் அனுபவம் கொண்ட, உளவியல் முதலுதவி திறன்கள் பெற்ற, பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இந்த இணையதளத்தில் பதிவுபெறலாம்.

உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு தேவைப்படுவோர் 18002026868 என்ற அவசர சேவை அழைப்பு எண்ணில் தொடர்புகொள்ளலாம்.