பணிப்பெண்ணைத் துன்புறுத்திய மாதுக்கு 21 மாதமும் அவர் கணவருக்கு 4 மாதமும் சிறை

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய மாதுக்கு 21 மாதமும் அவர் கணவருக்கு 4 மாதமும் சிறை

3 mins read
585b8999-c389-4350-9400-a76ce2c670b1
கொடுக்கப்படும் வேலைகளை முறையாக செய்ய தெரியவில்லை என்ற காரணத்தால் ஃபர்ஹா தெஹ்சீனும் (இடது) அவரது கணவர் முகம்மது தஸ்லீமும் தங்கள் இல்லப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலைக்­குச் சேர்ந்த முதல் நாளி­லி­ருந்து தங்­க­ளின் இல்­லப் பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­திய மாது ஒரு­வ­ருக்கு 21 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பின்­னர் தம் மனை­வி­யான 39 வயது ஃபர்­ஹா தெஹ்­சீ­னு­டன் சேர்ந்து 27 வயது இந்­திய நாட்­ட­வ­ரான அமன்­தீப் கோர் எனும் பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­திய அவ­ரது கண­வ­ரான 41 வயது முகம்­மது தஸ்­லீ­முக்கு நான்கு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கொடுக்­கப்­படும் வேலை­க­ளைச் சரி­வர செய்யாததால், ஃபர்­ஹா 2016ஆம் ஆண்டு நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் திரு­வாட்டி அமன்தீப்பைத் தாக்­கி­ய­து­டன் அவ­ரைக் கழி கொண்டு அடிப்­ப­தா­க­வும் மிரட்­டி­யுள்­ளார் என்­றும் இரு முறை ஃபர்­ஹா, அமன்­தீப்பை குத்­தி­ய­து­டன் உதைத்­தார் என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

நீதி­மன்ற விசா­ர­ணையில் அமன்­தீப்பை ஒன்­பது முறை ஃபர்­ஹா தாக்­கி­யுள்­ளது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று மாவட்ட நீதி­பதி ஸைஃபுதின் சரு­வான் இவ்­வாண்டு ஜூன் 9ஆம் தேதி­யன்று கூறி­னார்.

குற்­றம் சாட்­டப்­பட்ட இரு­வ­ரும் இந்­திய நாட்­ட­வர்­கள் என்­றும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்ட பணிப்­பெண்­ணுக்கு ஃபர்­ஹா $4,500ஐயும் அவ­ரது கண­வர் $1,000யும் இழப்­பீடாகத் தர வேண்­டும் என்­றும் நேற்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இரு மகன்­க­ளுக்­குத் தாயான திரு­வாட்டி அமன்­தீப், 2016ஆம் ஆண்டு நவம்­பர் 9ஆம் தேதி முதல் ஃபர்­ஹா­வின் வீட்­டில் பணிப்­பெண் வேலை­யைத் தொடங்­கி­னார்.

வார நாட்­களில் கொடுக்­கப்­படும் வேலை­களை முடித்­து­விட்டு திரு­வாட்டி அமன்­தீப் அடுத்த நாள் அதி­காலை 3 மணிக்­குத் தூங்­கச் செல்­வார் என்­றும் இரண்டு மணி நேரம் கழித்து அவர் எழுந்து விடு­வார். வார­யி­று­தி­யில் அவர் காலை 7.30 மணிக்கு எழுந்து விடு­வார்.

வேலைக்­குச் சேர்ந்த முதல் நாளி­லி­ருந்தே ஃபர்­ஹா தம்­மைக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தாக அமன்­தீப் விசா­ர­ணை­யின்­போது தெரி­வித்­தார்.

"ஏன் என்னை முரட்­டுத்­த­ன­மாக நடத்­து­கி­றீர்­கள்," என்று அமன்­தீப், ஃபர்­ஹா­னி­டம் கேட்க, "நான்­தான் உன்னை இங்கு வர­வ­ழைத்­தேன். உன்னை எப்­படி நடத்த வேண்­டும் என்­பது என் விருப்­பம்," என்று பதி­ல­ளித்­துள்­ளார்.

மேலும், தம் கண­வ­ரு­டன் தகாத உறவு வைத்­துள்­ளார் என்று குற்­றம் சுமத்­தி­யும் ஃபர்­ஹா பணிப்­பெண்­ணைக் கொடு­மைப்­ப­டுத்­தி­னார் என்­றும் முத­லில் அமன்­தீப்­பி­டம் அன்­பா­கப் பழ­கிய தஸ்­லீ­மும் பின்­னர் அவரிடம் முரட்­டுத்­த­ன­மாக நடந்­து­கொள்­ளத் தொடங்­கி­னார் என்­றும் நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

"சொல்­லப்­படும் வேலை­களை முறை­யா­கச் செய்­ய­வில்லை என்­றால் உன்னை சன்­ன­லி­ருந்து கீழே தள்­ளி­வி­டு­வோம். யாரா­வது கேட்­டால் உனக்கு மன­நிலை சரி­யில்லை. நீயாக சன்­ன­லிலி­ருந்து குதித்து விட்­டாய் என்று சொல்லி விடு­வோம்," என்­றும் ஃபர்­ஹா மிரட்­டி­யுள்­ளார் என்­றும் அர­சுத்­ தரப்பு வழக்­க­றி­ஞர் சொன்­னார்.

அவர்­கள் தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் வீட்டை விட்டு வெளியே சென்­ற­தும், ரிவர்­வேல் கிர­சென்ட் புளோக்­கின் நான்­காம் மாடி வீட்­டி­லி­ருந்து அமர்­தீப், சன்­ன­லுக்கு வெளியே உள்ள விளிம்­பில் நின்று தப்­பிக்க முயன்­றார்.

அதைப் பார்த்த அங்கு சாயம் பூசும் வேலை செய்த மணி மனோ­க­ரன் எனும் வெளி­நாட்டு ஊழி­யர் தனது பணி­மே­டை­யின் மூலம் அவ­ரைக் காப்­பாற்றி கீழே கொண்டு வந்­தார்.

பின்­னர் அமன்­தீப் குட் ஷெப்­பர்ட் சென்­டர் இல்­லத்­தில் வைக்­கப்­பட்­டார்.

தங்கள் தண்டனையை எதிர்த்து தம்பதி இருவரும் மேல் முறையீடு செய்யவிருப்பதால் ஃபர்ஹாவுக்கு 15,000 வெள்ளியும் தஸ்லீமுக்கு 8,000 வெள்ளியும் பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.