ஒரே ஒரு திட்டம் நீங்கலாக 89 பிடிஓ வீட்டுத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கின

பிடிஓ எனப்­படும் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் வீடு­களை உள்­ள­டக்­கிய 89 கட்­டு­மா­னப் பணி­கள் மீண்­டும் தொடங்கி இருக்­கின்­றன என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று அறி­வித்­தார்.

அத்­த­கைய வீடு­கள் மொத்­தம் 90 இடங்­களில் கட்­டப்­பட்டு வரு­கின்­றன. ஒரே ஒரு திட்­டத்­திற்கு மட்­டும் இனி­மேல்­தான் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் அங்­கீ­கா­ரம் வழங்க வேண்­டும்.

இவ்­வே­ளை­யில், பாது­காப்­பான முறை­யில் பணி­களை மீண்­டும் தொடங்­கு­வ­தன் தொடர்­பில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் அந்தத் திட்ட ஒப்­பந்த நிறு­வ­னத்­து­டன் செயல்­பட்டு வரு­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இன்­ன­மும் அங்­கீ­கா­ரம் பெறாமல் இருக்­கும் கட்­டு­மான இடம் பற்­றிய விவ­ரத்தை இந்­தக் கழ­கம் வெளி­யி­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து ஜூன் 2ஆம் தேதி முதல் கட்­டு­மா­னப் பணி­கள் படிப்­ப­டி­யாகத் தொடங்கி இருக்­கின்­றன.

இருந்­தா­லும் வேலை இடங்­களில் பாது­காப்பு நிய­தி­களைக் கட்­டு­மான நிறு­வ­னங்­கள் கடு­மை­யா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டிய நிலை இருக்­கிறது.

மனி­த­வளப் பற்­றாக்­குறை, கட்டு­மான சாத­னங்­கள் கிடைப்­ப­தில் உள்ள பிரச்­சி­னை­கள் ஆகி­யவை கார­ண­மாக சில பிடிஓ திட்­டங்­கள் சுமார் ஆறு மாதம் முதல் ஒன்­பது மாதம் வரை தாம­த­மா­கக் கூடும் என்று ஏற்­கெ­னவே வீவக கூறியது.

இந்­தக் கால அள­வில் இப்­போ­தைக்கு மாற்­ற­மில்லை என்­றா­லும் தாம­தத்­தைக் குறைப்­ப­தற்­கான வழி­க­ளைக் கழ­கம் தொடர்ந்து ஆராய்ந்து வரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சும் வீவ­க­வும் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

இத­னி­டையே, அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று செஞ்சா வேலி கட்­டு­மான இடத்­திற்­குச் சென்று அங்கு கடைப்­பி­டிக்­கப்­படும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைப் பார்­வை­யிட்­டார்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்­து­வ­தில் ஒப்­பந்த நிறு­வ­னங்­கள் கூடு­தல் முயற்­சியை எடுத்து வரு­கின்­றன. இதற்­காக அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­சர் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பாராட்டு தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், பிடிஓ திட்­டப் பணி­கள் எப்­போது முடி­வ­டை­யும் என்­பது பற்றி அப்­போ­தைக்கு அப்­போது வீடு வாங்­கு­வோ­ருக்குத் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று வீவக குறிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!