ஆய்வில் தகவல்: மோசடி மின்னஞ்சல்களை அடையாளம் காணக்கூடிய சிங்கப்பூரர்கள் 4%தான்

ஆய்வில் தகவல்: மோசடி மின்னஞ்சல்களை அடையாளம் காணக்கூடிய சிங்கப்பூரர்கள் 4%தான்

2 mins read
755f3371-5623-417c-93af-b119eddc294c
படம்: டிஎன்பி -

ஒரு­வரை ஏமாற்றி அவ­ரு­டைய சொந்த தக­வல்­க­ளைத் தந்­தி­ர­மா­கத் தெரிந்­து­கொள்ள முய­லும் மோசடி மின்­னஞ்­சல்­கள் சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து குறிப்­பி­டத்­தக்க இணைய மிரட்­ட­லாக இருந்து வரு­கின்­றன.

அத்­த­கைய மின்­னஞ்­சல்­களைப் போலி­யா­னவை என்று அடை­யா­ளம் காணும் ஆற்­ற­லு­டன் கூடிய சிங்­கப்­பூ­ரர்­கள் மிகவும் குறைவு என்­பது ஆய்வு ஒன்­றின் மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அந்த ஆய்வை சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு முகவை நடத்­தி­யது. இணை­யம் மூலம் நடத்­தப்­பட்ட அதில் 1,000 பேர் கலந்­து­கொண்­டார்­கள்.

அவர்­களில் மூன்­றில் இரண்டு பங்­கினர், ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விவ­ரங்­களை தெரிந்­து­கொள்ள மின்­னஞ்­சல் மூலம் நடக்­கும் மோசடி குறித்து தங்­க­ளுக்­குத் தெரி­யும் என்று குறிப்­பிட்­ட­னர். ஆனால் அத்­தகைய மின்­னஞ்­சல்­களை அடை­யா­ளம் கண்­ட­வர்­கள் சுமார் 40 பேர் மட்­டுமே என்­பது ஆய்வு மூலம் தெரி­ய­வந்­தது.

ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளி­டம் மொத்­தம் எட்டு மின்­னஞ்­சல்­கள் காட்­டப்­பட்­டன. அவற்­றில் ஆறு மின்­னஞ்­சல்­கள் மோசடி மின்­னஞ்­சல்­கள்.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான பிற்­சேர்க்­கை­களைக் கொண்ட மின்­னஞ்­சல்­களை அடை­யா­ளம் கண்­டு­வி­டக்­கூ­டிய ஆற்­ற­லு­டன் இருந்­த­வர்­கள் 57 விழுக்­காட்­டி­னர்.

ரக­சிய விவ­ரங்­களைத் தெரிந்­து­கொள்­ளும் நோக்­கத்­தில் தில்­லு­முல்லு ரீதி­யில் கோரிக்கை விடுக்­கும் மின்­னஞ்­சல்­களைத் துல்­லி­ய­மாக அடை­யா­ளம் காணும் திறமை 53 விழுக்­காட்­டி­ன­ரி­டம் இருக்கிறது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் மார்ச் மாதத்­துக்­கும் இடை­யில் வங்­கி­க­ளின் பெய­ரில் இடம்­பெற்ற மோச­டி­களில் 374 பேர் குறைந்­த­பட்­சம் $1.6 மில்­லி­யன் பணத்தை இழந்து இருக்­கி­றார்­கள் என்­பது போலிஸ் புள்­ளி­வி­வ­ரம் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

தந்­தி­ர­மாக மோசடி செய்து ஒரு­வ­ரின் ரக­சிய தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்ள முய­லும் மின்­னஞ்­சல்­க­ளின் எண்­ணிக்கை கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே அதி­க­ரித்­துள்­ளது. இத்­த­கைய மின்­னஞ்­சல்­கள் புதுப்­புது நவீன பாணி­க­ளு­டன் இடம்­பெறு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு இத்­த­கைய மின்­னஞ்­சல் தொடர்­பான 47,500 சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. இந்த எண்­ணிக்கை 2018 ஆம் ஆண்டு எண்­ணிக்­கை­யை­விட ஏறக்­கு­றைய மூன்று மடங்­கு என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்த மார்ச் மாதத்­திற்­கும் மே மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 1,500 ஏமாற்று இணை­யத் தொடர்­பு­கள் பல­ருக்­கும் அனுப்­பப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை முந்­தைய மூன்று மாதங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஏறக்­கு­றைய இரண்டு மடங்­கா­கும்.

இத­னி­டையே, இந்த நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய தொடர்பு தக­வல் அமைச்சர் எஸ் ஈஸ்­வ­ரன், சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­பை­விட சிறப்­பான பாது­காப்­புள்ள இணை­யப் பழக்­க­வ­ழக்­கங்­க­ளைப் பின்­பற்­றத் தொடங்கி இருக்­கி­றார்­கள் என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இணை­யம் மூலம் பட்­டு­வா­டாக்­களை செய்­யும்­போது பாது­காப்பைப் பலப்­ப­டுத்­திக் கொள்­ளும் வகை­யில் அவர்­கள் இரு நிலை பாது­காப்பு நடை­முறை போன்ற பல­வற்­றை­யும் கடைப்­பி­டிக்­கத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும் ஆய்வு முடிவை பார்க்­கை­யில் இணை­யத்தை அதி­கம் பயன்­படுத்­தும் இளை­யர்­கள் கூட மோசடி மின்­னஞ்­சல்­களை அடை­யா­ளம் காணும் திறமை இல்­லா­த­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டும் என்று தெரி­கிறது. ஆகை­யால் நம்­மு­டைய இணை­யப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர வேண்­டும் என்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.