சுங்காய் தெங்கா தங்கும்விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம்: 4,800 பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு

சுங்காய் தெங்கா தங்கும்விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம்: 4,800 பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு

1 mins read
1c67d5b6-04da-4003-8fbc-a867125d91d7
-

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 58 பேர் சுங்காய் தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதியுடன் தொடர்புடையவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

வழக்கமான பரிசோதனை மூலம் அவர்களுக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது சிலருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

மேலும் பரவலைத் தடுக்க ஊழியர்கள் கிட்டத்தட்ட 4,800 பேர் வீட்டில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் அந்த ஊழியர்களுக்கு கொவிட்-19க்கான பரிசோதனை நடத்தப்படும்.