தடுப்பூசி போடுவது அவசியம்: மருத்துவர்கள்

கொவிட்-19 சூழலில் சளிக்காய்ச்சல், நிமோனியா போன்ற மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

குழந்தைப் பருவத்தில் கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டிய தட்டம்மை, டிப்தீரியா போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மற்ற தடுப்பூசிகள் அந்த அளவிற்கு போட்டுக்கொள்ளப்படுவதில்லை என்றும் சொன்னார் சிராங்கூன் ‘மிஷன் மெடிக்கல் கிளினிக்’ மருத்துவர் லியோங் சூன் கிட்.

பெரியவர்களும் முக்கியமான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2017ஆம் ஆண்டில் பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணை எனும் திட்டத்தைச் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியது. சளிக்காய்ச்சல், நிமோனியா, எச்பிவி உள்ளிட்ட ஏழு தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, 18 வயதுக்குட்பட்ட தகுதிபெறும் சிங்கப்பூர் பிள்ளைகள் சளிக்காய்ச்சல், சின்னம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக்கொள்ளலாம். அதேபோல, தேசிய பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பெரியவர்களுக்கும் $35 முதல் $125 மானியம் கிடைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!