ஜூலையில் மூலாதார பணவீக்கம் 0.4%க்கு சரிவு

ஜூலையில் மூலாதார பணவீக்கம் 0.4%க்கு சரிவு

1 mins read
23e7dbc8-4cca-4080-be5f-90b4d1810c3b
-

மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கான செலவுகள் மேலும் குறைந்ததாலும் சமைக்கப்படாத உணவுக்கான பணவீக்கம் குறைந்ததாலும் ஜூலை மாதத்துக்கான சிங்கப்பூரின் மூலாதார பணவீக்கம் இன்னும் மோசமான நிலைக்குச் சரிந்தது.

தங்குமிடம், தனியார் போக்குவரத்து செலவுகள் சேர்க்கப்படாத மூலாதார பணவீக்கம் ஜூலையில் 0.4%க்கு சரிந்தது. அது ஜூன் மாதத்தில் 0.2% சரிவில் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொடர்ந்து ஆறு மாதங்களாக மூலாதார பணவீக்கம் சரிவு நிலையையே காட்டுகிறது.

இதற்கிடையே, தனியார் போக்குவரத்து செலவில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான சரிவு மூலாதார பணவீக்கம் சற்று மேம்பட உதவியது.

ஜூனில் 0.5%ஆக இருந்த அதன் பணவீக்கம் ஜூலையில் 0.4% ஆகியது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.