ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஆடவருக்கு மேலும் ஓராண்டு சிறை

ஏற்கெனவே சிறையில் இருக்கும் ஆடவருக்கு மேலும் ஓராண்டு சிறை

1 mins read
ee3edb59-b8ff-4e76-9fce-71bcef95fe29
-

ஆறு பெண்களை ஏமாற்றி ஏறத்தாழ $437,000 அபகரித்த குற்றத்துக்காக மலேசியரான 49 வயது பீட்டர் ஆவ் பூ சியோங்கிற்குக் கடந்த ஆண்டு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் ஒரு பெண்ணை ஏமாற்றி $320,000க்கும் அதிகமான தொகையை அபகரித்ததை ஆவ் இன்று ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றத்துக்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றியதும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனையை ஆவ் தொடங்குவார்.