பணிப்பெண்ணுக்கு அடி, உதை: ஆசிரியை மட்டுமின்றி ஆடவர் மீதும் குற்றச்சாட்டு

1 mins read
d35dc60e-181f-4803-ad2c-87b66deb9e4a
ஜாலான் மாத்தா ஆயரில் உள்ள கூட்டுரிமை வீட்டில் அந்தப் பணிப்பெண் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் நாச்சம்மை செல்வ நாச்சியப்பனால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பணிப்பெண் ஆடவர் ஒருவராலும் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாட்டி ஹிலா ஹிலா மியாங்கை துன்புறுத்தியதாக அருணாச்சலம் முத்தையா மீது ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாலான் மாத்தா ஆயரில் உள்ள கூட்டுரிமை வீட்டில் அந்தப் பணிப்பெண் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த வீடு அருணாச்சலம் முத்தையாவுக்குச் சொந்தமானது.

2018ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதியிலும் ஜூலை 16ஆம் தேதியிலும் பணிப்பெண்ணை அருணாச்சலம் உதைத்ததாகக் கூறப்படுகிறது.

பணிப்பெண்ணின் நெற்றியில் அவர் குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக 38 வயது நாச்சம்மை மீது மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் அருணாச்சலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $7,500 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்