சட்டவிரோத ஒன்றுகூடல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர்

சட்டவிரோத ஒன்றுகூடல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர்

1 mins read
22ed5935-648f-49e7-a025-0c7847071b10
சட்டவிரோத ஒன்றுகூடல் குற்றத்தை ஒப்புக்கொண்ட அக்லிமா அப்துல் அஸ்மி (இடது), சாய் ரகு வைஷ்ணவி ரகு (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு தளர்வு நடப்பில் இருந்தபோது பியோ கிரெசண்ட் வட்டாரத்தில் ஒன்றுகூடிய 13 பேரில் மூவர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

புளோக் 42 பியோ கிரசெண்ட்டுக்கு அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இந்தக் கும்பல் ஒன்றுகூடி மதுபானம் அருந்திக்கொண்டும் புகைபிடித்துக்கொண்டும் சத்தம் போட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விதிமுறையை மீறியதாக ஸேக் டேனியல், சாய் ரகு வைஷ்ணவி ரகு, அக்லிமா அப்துல் அஸ்மி ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இந்த மூவர் தொடர்பான வழக்கிற்கு வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூவரும் தலா $3,500 அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசாங்க தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் மூவருக்கும் அந்தளவு பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.