மூன்று பேரை ஏமாற்றி அவர்களிடமிருந்து $6,000 பறித்து 19 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்த ஆடவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் விற்பனை அதிகாரியான வோங் சீ குவான் தாய்லாந்துக்குத் தப்பி ஓடியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அவர் இவ்வாண்டு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
அவர் சிங்கப்பூர் திரும்ப முடிவெடுத்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. தம்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தம்மிடம் ஏமாந்த இருவரிடம் முழு பணத்தையும் வோங் திருப்பிக் கொடுத்துவிட்டார். மூன்றாவது நபரிடமிருந்து பறித்த பணத்தின் ஒரு பகுதியை அவர் திருப்பிக் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

