சிங்கப்பூரில் புதிதாக 60 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மூவரில் ஒருவர் சிங்கப்பூரர் என்றும், இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய தொற்றுகளில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

