சீனா செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கு கட்டாயம்

சீனா செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கு கட்டாயம்

1 mins read
35d9dc52-99e2-4fe3-8e4a-41756919a572
-

சீனாவுக்குச் செல்லும் சிங்கப்பூர் பயணிகள் தாங்கள் புறப்பட்டுச் செல்வதற்கு முன் ஐந்து நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 14 நாட்களில் தங்களுக்குக் காய்ச்சல் அல்லது 37.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் அதிக உடல் வெப்பநிலையோ சுவாசக் கோளாறோ இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய அறிகுறியுடன் இருப்பவர்களோடு தங்களுக்குத் தொடர்பு இல்லை என்பதையும் அவர்கள் தெரிவிக்கவேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத் தளத்தில் இவற்றைக் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

சிங்கப்பூரும் சீனாவும் இருதரப்புப் பயணிகளை அனுமதிக்கும் ஏற்பாடு ஒன்றைப் பற்றி ஜூன் மாதம் அறிவித்தன. அதன்படி யாரும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

பதிலாக, பயணிகள் புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள்ளும் தரை இறங்கிய பிறகும் கொவிட்-19 பரிசோதனைக்கு கட்டாயம் உட்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.