குறைவாகப் பயன்படுத்தப்படும் சாலைத் தடங்கள் சைக்கிள், பேருந்துத் தடங்களாக மாற்றப்படும்

குறைவாகப் பயன்படுத்தப்படும் சாலைத் தடங்கள் சைக்கிள், பேருந்துத் தடங்களாக மாற்றப்படும்

3 mins read
11acc43d-475e-4802-a59f-baf6552a5201
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் சைக்கிளோட்ட பாதை கட்டமைப்பை 1,300 கிலோ மீட்டருக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் திட்டம் மேற்கொள்ளும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிரு­மிப் பர­வல் கார­ண­மாக சாலை­களில் போக்­கு­வ­ரத்து குறைந்­துள்­ள­தோடு பய­ணம் செய்­யும் முறை­யும் மாறி வரு­வ­தால், குறை­ந்த அளவில் பயன்­ப­டுத்­தப்­படும் குறிப்­பிட்ட சில சாலைத் தடங்­கள் சைக்­கி­ளோட்­டு­வ­தற்­கும் பேருந்­து­கள் செல்­வ­தற்­கும் மாற்­றப்­படலாம் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், குறிப்­பிட்ட சாலை­களைப் பாத­சா­ரி­க­ளின் பயன்­பாட்­டிற்­காக மாற்­றும் சாத்­தி­ய­மும் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். அதி­ப­ர் உரை மீதான போக்­கு­வரத்து அமைச்­சின் பிற்­சேர்க்­கை­யில் திரு ஓங் நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

கிரு­மிப் பர­வல் சூழல் கார­ண­மாக கிரீஸ் தலை­ந­கர் ஏதன்ஸ் உள்­ளிட்ட பல நக­ரங்­களில் சில சாலைப் பகு­தி­கள் பாத­சா­ரி­க­ளுக்­கும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்­கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போ­தைய சூழ­லில் பலர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தை­யும் உச்ச நேரங்­களில் பொதுப் போக்கு ­வ­ரத்­தில் நெரி­ச­லைக் குறைக்க ஊழி­யர்­கள் வெவ்­வேறு நேரங்­களில் வேலைக்­குச் சென்று வரு­வ­தை­யும் அமைச்­சர் ஓங் சுட்­டி­னார்.

2030ஆம் ஆண்­டிற்­குள் சைக்­கி­ளோட்­டப் பாதை கட்­ட­மைப்பை 1,300 கிலோமீட்­ட­ராக அர­சாங்­கம் விரி­வு­ப­டுத்­த­வுள்­ளது. தற்­போது அந்­தக் கட்­ட­மைப்­பின் நீளம் 460 கிலோ மீட்­ட­ராக உள்­ளது.

கார்­கள் குறைந்த தேச­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­ம் இலக்கை எட்­டு­வ­தற்கு இத்­த­கைய திட்­டங்­கள் உத­வும் என்று திரு ஓங் கூறி­னார்.

நிலப் போக்­கு­வ­ரத்து, விமா­னப் போக்­கு­வ­ரத்து, கப்­பல் போக்­கு­வரத்து குறித்த மற்ற திட்­டங்­கள் பற்­றி­யும் அவர் பேசி­னார்.

நிலப் போக்­கு­வ­ரத்­தைப் பொறுத்­த­வரை, உச்ச நேரங்­களில் 90 விழுக்­காடு பய­ணங்­கள் 45 நிமி­டங்­க­ளுக்­குள் நிறை­வு­பெ­று­வது குறித்த இலக்கை எட்ட தொடர்ந்து திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­படும்.

பொதுப் போக்­கு­வ­ரத்து முறை­யில் நம்­ப­கத்­தன்­மையை நிலை­நாட்ட தொடர்ந்து வளங்­கள் முத­லீடு செய்­யப்­படும் என்று திரு ஓங் தெரி­வித்­தார். சுமார் ஆண்டுக்கு ஒரு­முறை புதிய எம்ஆர்டி நிலை­யங்­களும் ரயில் பாதை­களும் திறக்­கப்­படும்.

நட­மா­டும் பிரச்­சி­னை­கள் உடை­யோ­ருக்கு உதவ பொதுப் போக்கு­வ­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத்­து­டன் சேர்ந்து தமது அமைச்சு பணி­யாற்­றும் என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

பொதுப் போக்­கு­வ­ரத்து முறையை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு பெரிய அள­வி­லான உள்­கட்­ட­மைப்பு தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அதற்கு செல­வும் ஆகும் என்­றார் அவர்.

"ஆனால், இது ஓர் அத்­தி­யா­ வ­சிய செலவு. அதைச் சிக்­க­னத்­து­டன் செய்ய வேண்­டும். விமா­னப் போக்­கு­வ­ரத்­தைப் பொறுத்­த­வரை, விமா­னப் பய­ணங்­களைப் பாது­காப்­பான முறை­யில் அதி­க­ரிப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்," என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

பய­ணி­க­ளுக்­கான சேவை­களைக் கவ­ன­மா­க­வும் கட்­டங்­கட்­ட­மா­க­வும் தொடர, சிங்­கப்­பூர் மேற்­கொண்டு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்­றார் அவர். கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் நாடு­கள் அல்­லது நக­ரங்­க­ளு­டன் ஏற்­பா­டு­க­ளைத் தொடங்க வேண்­டும். சாங்கி விமான நிலை­யத்­தின் ஐந்­தாம் முனைய திட்­டத்தை அர­சாங்­கம் மறு­ஆய்வு செய்து வரு­கிறது என்று அவர் கூறி­னார்.

கப்­பல் போக்­கு­வ­ரத்து என வரும்­போது, கொவிட்-19 சூழ­லில் அந்­தத் துறை மீள்­தி­ற­னு­டன் செயல்­பட்டு வரு­வதை அமைச்­சர் ஓங் சுட்­டி­னார். முன்­னோக்­கிச் செல்­கை­யில், 2040களில் துவாஸ் துறை­முக கட்டு­மா­னப் பணி­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி நிறை­வேற்­றும் பணி­யில் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஈடு­படும் என்று அவர் சொன்­னார்.

மலே­சி­யா­வு­ட­னான எல்லை கடந்த ரயில் திட்­டங்­க­ளைப் பொறுத்­த­வரை, கோலா­லம்­பூர்- சிங்­கப்­பூர் அதி­வேக ரயில் திட்­டம் தொடர்­பாக மலே­சி­யா­வு­டன் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக திரு ஓங் தெரி­வித்­தார்.