கட்டடச் சூழல் துறையில் பத்து புதிய பாடப்பிரிவுகள்

கட்டடச் சூழல் துறையில் பத்து புதிய பாடப்பிரிவுகள்

2 mins read
d2fe152f-216a-432d-bc40-af27720c7157
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மின்னிலக்க கட்டடப் புத்தாக்க நிலையத்தின் விரிவுரையாளரும் ஆலோசகருமான திரு கிறிஸ் ஹோ (வலது) வழங்கும் பெரிதாக்கப்பட்ட உண்மை நிலவரம்/ மெய்நிகர் உண்மை நிலவரம் ஆகியவை தொடர்பான விளக்கத்தை கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் (இடது) கவனிக் கிறார். நடுவில் இருப்பவர் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி யின் முதல்வர் திரு சோ வாய் வா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பணி­யி­டைக்­கா­லத்­தில் இருப்­ப­வர்­கள் கட்­ட­டச் சூழல் துறை­யில் புதிய வேலை தேடிக்­கொள்ள விரும்­பி­னால், அத்­துறை தொடர்­பான திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள உத­வி­யாக புதிய பாடப்­பி­ரி­வு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யம், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி உள்­ளிட்ட பயிற்சி வழங்கு­நர்­க­ளின் ஆத­ர­வு­டன் இம்­மா­தத்­தில் இருந்து படிப்­ப­டி­யாக கிட்­டத்­தட்ட 900 பயிற்சி வாய்ப்­பு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்து இருக்­கிறது.

கட்­டு­மா­னம் மற்­றும் கட்­ட­டச் சூழல் நிர்­வா­கம், பாது­காப்பு மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் சேவை­கள் போன்ற துறை­களில் பத்­துக்­கும் மேற்­பட்ட பாடப்­பி­ரி­வு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

எஸ்ஜி ஒற்­றுமை திறன்­கள் திட்­டத்­தின்­கீழ் இந்­தப் பாடப்­பி­ரி­வு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. வேலை தேடும்­போதே தங்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் நோக்­கத்­து­டன், ஆறு முதல் 12 மாதங்­கள் வரை­யி­லான முழு நேரப் பயிற்­சித் திட்­டங்­க­ளாக இவை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக்கு நேற்று சென்­றி­ருந்த கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், புதிய பாடப்­பி­ரி­வுக்­கு­ரிய வகுப்­பில் அமர்ந்து, கட்­ட­டத் தக­வல் மாதி­ரி­ய­மைப்பு நிர்­வாக சிறப்­புப் பட்­ட­யம் பயி­லும் பயிற்­சி­யா­ளர்­கள் கணி­னி­யைப் பயன்­ப­டுத்தி மெய்­நி­கர் பாணி­யில் ஒரு கட்­ட­டத்தை எவ்­வாறு வடி­வ­மைக்­கின்­ற­னர் என்­ப­தைக் கவ­னித்­தார்.

நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவை­யான திறன்­க­ளைப் பயிற்­சி­யா­ளர்­கள் பெறும் வகை­யில் பாடப்­பி­ரி­வு­கள் உரு­வாக்­கப்­ப­டு­வதை உறுதி­செய்ய பல்­வேறு பயிற்சி வழங்­கு­நர்­க­ளு­ட­னும் முன்­னணி தொழில் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்­தது.

கட்­ட­டத் தக­வல் மாதி­ரி­ய­மைப்பு நிர்­வா­கத்­தில் சிறப்­புப் பட்­ட­யம் பெற ஓராண்டு பயில வேண்­டும். இதற்­கான கட்­ட­ணம் $1,000. இதற்கு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் பயிற்சி உதவி நிதி­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பும் சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யும் சொத்து மேம்­பாட்டு நிறு­வ­ன­மான கேப்­பிட்­ட­லேண்ட், உள்­கட்­ட­மைப்பு நிறு­வ­ன­மான சிபிஜி குழு­மம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து, மின்­னி­லக்க வடி­வ­மைப்பு, திட்ட நிர்­வா­கம் உள்­ளிட்ட துறை­களில் உள்ள வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெறும் வித­மாக இந்­தப் பாடப்­பி­ரி­வில் பயிற்சி வழங்கு­கின்­றன.

அவ்­விரு நிறு­வ­னங்­களும், ஓராண்டு பயிற்­சியை முடித்­த­வர்­களி­டம் இருந்தே வேலைக்கு ஆட்­களை எடுக்­கக்­கூ­டும்.

கடந்த ஜூலை­யில் எஸ்ஜி ஒற்­றுமை திறன்­கள் திட்­டம் தொடங்­கப்பட்­டதிலிருந்து, 40 பாடப்­பி­ரி­வு­களில் கிட்­டத்­தட்ட 700 பேர் சேர்ந்­துள்­ள­னர்.

"பணி­யி­டைக்­கா­லத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் எஸ்ஜி ஒற்­றுமை திறன்­கள் திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை சேர்ந்­த­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் 40 வயது மற்­றும் அதற்கு மேலா­ன­வர்­கள் என்­பது மகிழ்ச்­சி­அ­ளிப்­ப­தாக உள்­ளது," என்று ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பின் தலைமை நிர்­வாகி ஓங் ஸி சின் நேற்­றைய நிகழ்ச்­சி­யின் போது கூறி­னார்.