'புத்தாக்கமிக்க வர்த்தகங்கள் வெற்றி பெற அரசு உதவும்'

1 mins read
69b6fbba-231d-43cf-aefd-c3f72866b213
-

புத்தாக்கமிக்க வர்த்தகங்கள் வளர்ச்சிக்கு உந்துதல் சக்தியாக திகழ்வதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொருளியல் மந்தநிலையின்போது இது பொருந்தும் என்றார் அவர்.

புத்தாக்கமிக்க வர்த்தகங்கள் வெற்றி பெற உதவும் வகையில் தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக திருவாட்டி கோ கூறினார்.

பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் உள்ள The Gym Podக்கு நேற்று சென்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தானியங்கி உடற்பயிற்சிக்கூடமான The Gym Pod 24 மணி நேரத்துக்குத் திறந்திருக்கும்.

ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் யாரும் இன்றி இயங்கும் இந்த உடற்

பயிற்சிக்கூடம் வர்த்தக, தொழில் அமைச்சின் Pro- Enterprise Panel எனும் வர்த்தக உதவிப் பிரிவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு 2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

"சில புத்தாக்கமிக்க வர்த்தகங்கள் நடப்பில் உள்ள ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்கு உட்படாமல் போகக்கூடும். இதை Pro-Enterprise Panel சரிசெய்கிறது. இவ்வாறு இந்தப் பிரிவு முக்கிய பங்காற்றுகிறது," என்று திருவாட்டி லோ தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பரிந்துரைகள் இப்பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

The Gym Pod உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கும் துணை அமைச்சர் லோ யென் லிங் (இடது).

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்