எஸ்ஐஏ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

1 mins read
c782dca7-f5e3-4f6a-8b93-c58b487a3a0d
கோப்புப்படம்: எஸ்டி, யோஹுய் -

விமா­னத்­தின் கட்­ட­மைப்­பைப் பாதிக்­கும் இரண்டு தயா­ரிப்­புக் குறை­பா­டு­கள் உல­கின் எட்டு போயிங் 787 ட்ரீம்­லை­னர் விமா­ன­கங்­களில் காணப்­ப­டு­கின்­றன.

அவற்­றுள் தனது விமா­ன­மும் அடங்­கும் என்று நேற்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்ஐஏ) தெரி­வித்­தது. தனது போயிங் 787-10 ரக விமா­னங்­களில் ஒன்று தொழில்­நுட்­பக் கோளாற்­றால் பாதிக்­கப்­பட்டு இருப்­பது தமக்­குத் தெரி­யும் என்று அது தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்டுள்­ளது.

"அந்த விமா­னம் தற்­போது சேவை­யில் இல்லை. கோளாற்­றைச் சரி­செய்­வ­தன் தொடர்­பில் போயிங் நிறு­வ­னத்­து­டன் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றும்," என்­றது அந்த அறிக்கை.

பாதிக்­கப்­பட்டு இருக்­கும் எட்டு விமா­னங்­க­ளை­யும் அந்­தந்த விமான நிறு­வ­னங்­கள் சேவை­யில் இருந்து அகற்­றவேண்டும் என போயிங் கேட்­டுக்கொண்­டதாக 'த ஏர் கரண்ட்' எனப்­படும் விமா­னப் போக்­கு­வ­ரத்து செய்தி இணை­யத்­த­ளம் நேற்று முன்­

தி­னம் தெரி­வித்து இருந்­தது. இந்த எட்டு விமா­னங்­களும் கடந்த ஐந்து ஆண்­டு­களில் தயா­ரிக்­கப்­பட்­டவை.

பாதிக்­கப்­பட்ட விமா­னங்­களில் சில யுனை­டெட் ஏர்­லைன்ஸ், ஏர் கனடா ஆகிய நிறு­வ­னங்­க­ளி­லும் உள்­ளன. கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்ள இரு குறை­பா­டு­களும் ஒன்­றோ­டொன்று தொடர்­பு­டை­யவை என்­றும் தமது வடி­வ­மைப்­பின் தரத்­திற்­கான தேவை­க­ளோடு அவை ஒத்­துப்­போ­க­வில்லை என்­றும் அந்த இணை­யத்­த­ளம் வாயி­லாக போயிங் தெரி­வித்துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட எட்டு விமா­னங்­களும் மீண்­டும் சேவை­யைத் தொடங்­கு­முன் பழு­து­நீக்­கப்­பட்டு நன்கு சோதிக்­கப்­பட வேண்­டும் என்­றும் அது குறிப்­பிட்டு உள்­ளது.