85 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது சன்டெக் சிங்கப்பூர்

85 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது சன்டெக் சிங்கப்பூர்

2 mins read
5bfffac2-1170-49cd-81c0-e365ecc61a75
கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக எம்­ஐ­சிஇ (MICE) எனப்­படும் கூட்­டங்­கள், ஊக்­கு­விப்­பு­கள், மாநா­டு­கள் மற்­றும் கண்­காட்­சித் துறை­யில் சரிவு ஏற்­பட்­ட­தன் விளை­வாக ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சன்டெக் சிங்கப்பூர் நிர்­வா­கம் கூறி­யது. -

தனது ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேரை ஆட்­கு­றைப்பு செய்­தி­ருப்­ப­தாக சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு மற்­றும் கண்­காட்சி மையம் தெரி­வித்து உள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக எம்­ஐ­சிஇ (MICE) எனப்­படும் கூட்­டங்­கள், ஊக்­கு­விப்­பு­கள், மாநா­டு­கள் மற்­றும் கண்­காட்­சித் துறை­யில் சரிவு ஏற்­பட்­ட­தன் விளை­வாக ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அதன் நிர்­வா­கம் கூறி­யது.

உணவு தயா­ரிப்பு, விற்­பனை மற்­றும் நிகழ்­வு­கள், மனி­த­வ­ளம், நிதி ஆகிய பிரி­வு­களில் வேலை செய்து வந்த 85 ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக நேற்று முன்­தி­னம் அந்த மையத்­தின் நிர்­வா­கம் தெரி­வித்­தது. இந்த 85 பேரில் சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­கள் 60 பேர் என்­றும் இதர 25 பேர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்­றும் அது குறிப்­பிட்­டது.

ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட பின்­னர் சன்­டெக் சிங்­கப்­பூ­ரில் 89 ஊழி­யர்­கள் இருப்­பர். உள்­ளூர் மற்­றும் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அவர்­கள்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லால் எம்­ஐ­சிஇ துறை கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தன் கார­ண­மாக சன்­டெக் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெற வேண்­டிய நிகழ்­வு­கள் அனைத்­தும் அடுத்த ஆண்டு ஏப்­ரல் வரை நிறுத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஆட்­கு­றைப்பு செய்­வ­தற்கு முன்­ன­தாக கடந்த பிப்­ர­வரி மாதம் முதல் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற செல­வு­க­ளைக் குறைப்­ப­தில் மையம் கவ­னம் செலுத்­தி­ய­தா­க­வும் புதி­தாக ஆட்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வதை முடக்கி வைத்­தி­ருந்­த­தா­க­வும் சன்­டெக் சிங்­கப்­பூர் கூறி­யது. மேலும் தனது நிர்­வா­கத்­தி­ன­ருக்கு 40 விழுக்­காடு சம்­ப­ளக் குறைப்­பும் செய்­யப்­பட்­ட­தாக அது தெரி­வித்­தது.

தனது ஊழி­யர்­களை ஆட்­கு­றைப்பு செய்­வ­தற்­கான முடிவு அவ்­வ­ளவு எளி­தாக இருக்­க­வில்லை என்­றும் ஊழி­யர்­க­ளின் செயல்­தி­ற­னுக்­கும் ஆட்­கு­றைப்­புக்­கும் தொடர்­பில்லை என்­றும் சன்­டெக் சிங்­கப்­பூ­ரின் தலைமை நிர்­வாக அதி­காரி அருண் மாதோக் தெரி­வித்­தார்.

"எங்­கள் நிறு­வ­னத்­தின் வெற்­றிக்கு ஒவ்­வொரு ஊழி­ய­ரும் காலம் கால­மா­கப் பங்­க­ளித்து வந்­துள்­ள­னர். திறன்­ப­டைத்த, அரு­மை­யான ஊழி­யர்­கள் பல­ரை­யும் வேறு வேலை தேடிக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­வது உண்­மை­யி­லேயே வருத்­தத்­திற்­கு­ரி­ய­தாக இருந்­தது," என்று அவர் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.