இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் புதிதாக 51 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்றைய எண்ணிக்கையையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 56,517 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் நபர் சமூக அளவில் பரவிய ஒரே சம்பவம் என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் மூவருக்கு இன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தது முதல் வீட்டில் தங்கும் உத்தரவைப் பின்பற்றி வருகின்றனர்.
இன்றிரவு அமைச்சு மேல் விவரங்களை அறிவிக்கும்.

