ஒற்றை, இரட்டைப் படை அணுகுமுறையால் மக்கள் நடமாட்டம் குறைந்தது

ஒற்றை, இரட்டைப் படை அணுகுமுறையால் மக்கள் நடமாட்டம் குறைந்தது

1 mins read
87e3a133-701b-452f-8a2f-2b19b554aece
-

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா ஆகிய இரண்டு கடைத்தொகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சை சேர்ந்த பணிப்பெண்கள் தங்கள் ஓய்வுநாட்களில் தங்கள் நண்பர்களை லக்கி பிளாசாவில் சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த வாரயிறுதியில் வருகையாளர் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க லக்கி பிளாசாவும் பெனின்சுலா பிளாசாவும் ஒற்றை, இரட்டைப் படை அணுகுமுறையை கையாண்டுள்ளன.

அடையாள அட்டை எண்ணின் கடைசி எண் ஒற்றைப் படை எண்ணாக இருப்பவர்கள் ஒற்றைப் படை தேதிகளில் மட்டுமே லக்கி பிளாசாவுக்கும் பெனின்சுலா பிளாசாவுக்கும் செல்ல முடியும். அதே போல அடையாள அட்டை எண்ணின் கடைசி எண்ணை இரட்டைப் படை எண்ணாக கொண்டிருப்பவர்கள் இரட்டைப் படை தேதிகளில் மட்டுமே அவ்விடங்களுக்குச் செல்ல முடியும்.

இந்தப் புதிய விதிமுறையின் காரணமாக பொதுவாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்தக் கடைத்தொகுதிகள் இன்று வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.