நாடாளுமன்றத்தில் அதிபர் உரை மீதான விவாதம்

நாடாளுமன்றத்தில் அதிபர் உரை மீதான விவாதம்

1 mins read
6471b2d2-2630-4ca0-81f7-db9252518c54
நாடாளுமன்ற விவாதத்திற்கு இடையே பிரதமர் லீ சியன் லூங் முக்கிய உரையாற்றுவார். விவாதம் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங்கிற்கு இருக்கும் கடமைகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து அவைத் தலைவர் இந்திராணி ராஜா அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவார். படம்:எஸ்டி, டெஸ்மண்ட் பூ -

நாடாளுமன்றத்தில் நாளை தொடங்கி வாரம் முழுவதும் நடைபெறவுள்ள அதிபர் உரை மீதான விவாதத்தில் வேலைகள், கொவிட்-19 சூழலால் ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்பு போன்ற அம்சங்கள் குறித்து பெரிதும் பேசப்படும்.

அதிபரின் உரையின்போது எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவர். அதோடு, அதிபர் உரை மீதான அமைச்சுகளின் பிற்சேர்க்கையில் வெளியிடப்பட்ட திட்டங்களை அவர்கள் அலசி ஆராய்வர்.

வேலைகள் குறித்த கவலையே மக்களின் மனதில் மேலோங்கி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பைனியர் தனித்தொகுதி உறுப்பினர் பேட்ரிக் டே நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தொடங்கியும் வாரக் கடைசியில் அதை முடித்தும் வைப்பார். சிங்கப்பூரர் மூலாதார ஊழியரணியை வலுப்படுத்துவது குறித்தும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகிய பிரிவினர் பற்றியும் அவர் பேசவிருக்கிறார்.

நாடாளுமன்ற விவாதத்திற்கு இடையே பிரதமர் லீ சியன் லூங் முக்கிய உரையாற்றுவார். விவாதம் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங்கிற்கு இருக்கும் கடமைகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து அவைத் தலைவர் இந்திராணி ராஜா அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடுவார்.