முக்கிய தலைவர்களைப் பாதுகாக்கும் அதிரடி தாக்குதல் படையில் முதல் வீராங்கனை

முக்கிய தலைவர்களைப் பாதுகாக்கும் அதிரடி தாக்குதல் படையில் முதல் வீராங்கனை

1 mins read
cd680204-222b-4263-9012-e263bb76b25b
-

போலிஸ் பாது­காப்புத் தள­பத்­தி­யம் நடத்­தும் அதி­ரடித் தாக்­கு­தல் படைப் பிரிவு (சிஏயு) பயிற்சிப் படிப்­பில் சேர்ந்து பட்­டம் பெற்ற முதல் பெண்­மணி சார்­ஜண்ட் அனா. (இது உண்­மைப் பெயர் அல்ல)

இந்தப் பிரிவு, போலிஸ் பாது­காப்புத் தள­பத்­தி­யத்­தைச் சேர்ந்த மிக­வும் உய­ரிய பிரி­வா­கும். அதிபர், அமைச்­சர்­கள், இதர முக்­கிய பிர­மு­கர்­களைப் பாது­காப்­பது இந்­தப் பிரி­வின் பணி­யா­கும்.

இதில் இடம்­பெற்று இருப்­ப­வர்­களின் விவ­ரங்­களை வெளி­யி­டக் கூடாது. இந்த படைப்பிரி­வில் இடம்­பெற வேண்­டு­மா­னால் மூன்று மாத கடும் பயிற்­சி­யில் தேர்ச்சி பெற­வேண்­டும். ஆகக் கடைசியாகக் கலந்­து­கொண்ட எட்டு பேரில் ஐந்து பேர் தேர்ச்சி பெற்­ற­னர். அவர்­களில் சார்­ஜண்ட் அனா­வும் ஒரு­வர்.

சார்­ஜண்ட் அனா போன்ற அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூ­ரில் 2018ல் நடந்த அமெ­ரிக்க அதி­பர்-வட­கொ­ரிய தலை­வர் சந்­திப்பு போன்ற முக்­கிய நிகழ்ச்­சி­க­ளி­லும் தேசிய தின அணி­ வ­குப்­பி­லும் சென்ற வாரம் நாடாளு­மன்­றம் கூடி­ய­போ­தும் அதிரடிப் படை­யி­னர் என்ற முறை­யில் தங்­கள் பங்கை ஆற்­றி­னர்.

ஏதா­வது சம்­ப­வங்­கள் நிக­ழும்­போது முதல்­நிலை அர­ணா­கத் திகழ்ந்து இவர்­களே தங்­கள் பொறுப்­பில் இருக்­கும் பிர­மு­கர்­களைக் காப்­பாற்­று­வார்­கள்.

ஆகை­யால் இவர்­க­ளுக்கு அளிக்­கப்­படும் பயிற்­சி­கள் சவால்­மிக்­க­தாக இருக்­கும் என்று அதிரடிப் படைப்பிரி­வின் தள­பத்­திய அதி­காரி ஏஎஸ்பி பிரோஸ் லியோங், சென்ற வெள்­ளிக்­கி­ழமை நடந்த பயிற்சித் திறன்விளக்­கக் காட்­சி­யின்­போது தெரி­வித்­தார்.