தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு; மாற்றத்திற்குக் கோரிக்கை

வேலை அனுமதி அட்டைதாரர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தகுதி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முழுமை ஆகாத நிலையில் தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறைக்கும் நிபுணத்துவச் சேவைத்துறைக்கும் இந்தக் குறைந்தபட்ச சம்பளத்தை மேலும் உயர்த்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே மனிதவள அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மற்ற துறைகளைக்காட்டிலும் இந்தத் துறைகளில் பொதுவாகவே அதிக நிறுவனங்கள் தங்களது ஆட்சேர்ப்பில் பாரபட்சத்துடன் நடந்திருக்கக்கூடும் என நியாயமான பரிசீலனை கட்டமைப்பின் கண்காணிப்புப் பட்டியல் காட்டுவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளருமான திரு டே கூறினார். அதிபர் உரை குறித்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது சிங்கப்பூர மூலாதாரத்தை வலுப்படுத்துவதற்காக திரு டே தமது தொடக்க உரையில் பரிந்துரைத்த பல்வேறு யோசனைகளில் இதுவும் ஒன்று.

“கொவிட்-19 பிரச்சினையால் ஏற்பட்டுள்ள தடங்கல்களாலும் இவற்றால் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலையாலும் வேலைகளுக்காகவும் ஆட்சேர்ப்புக்காகவும் அதிகரித்துள்ள போட்டித்தன்மை குறித்து அடித்தள அளவில் கவலைகள் எழுந்துள்ளன. இவ்வகையில் நாங்கள் ‘தகுதி அடிப்படையிலான முறை’ என்ற தூணை நிலைநாட்டவேண்டும். ஊழியர்களை மதிப்பிடுவதிலும் அவர்கள் நடத்தப்படும் விதத்திலும் நியாயம் இருக்கவேண்டும். இது அனைத்துலக ஊழியர் அமைப்பின் அடிப்படையான கடப்பாடும்கூட, ” என்று அவர் தெரிவித்தார்.

இபி அட்டை, அதாவது வேலை அனுமதி அட்டையைக் கொண்டவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தொகையின் உயர்வை சிங்கப்பூர் இவ்வாண்டிலேயே இரண்டாவது முறையாக அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது அறிவிப்பை மனிதவள அமைச்சு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. புதிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றம் செப்டம்பர் மாதத்தில் செய்யப்படும் புதிய விண்ணப்பங்களுக்கு செல்லுபடியாகும்.

குறைந்தபட்ச சம்பள வரம்பை மனிதவள அமைச்சு முதன்முறையாக நிதித்துறைக்கு உயர்த்தியுள்ளது. அந்தத் தொகை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 5,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

‘எஸ்-பாஸ்’ அட்டைக்கான புதிய விண்ணப்பதாரர்களுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2,500 வெள்ளி ஊதியம் வழங்கப்படவேண்டும். இந்தத் தொகை முன்னதாக 2,400 வெள்ளியாக இருந்தது. அடுத்தாண்டு மே முதலான அனுமதி அட்டை புதுப்பிப்புகளை இந்த மாற்றம் பாதிக்கும்.

இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு நிர்வாகிகள், மேலாளர்கள், திறனாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் சம்பளங்களை உயர்த்தியோ அல்லது வேறு சில மாற்று ஏற்பாடுகளைச் செய்தோ அவர்களை வேலையில் தொடர்ந்து வைத்திருக்கக்கூடும் என தாங்கள் அஞ்சுவதாக தொழிற்சங்கத் தலைவர்களும் மேலாளர்களும் தம்மிடம் தெரிவித்ததாக திரு டே கூறினார்.

தொழிற்சங்கப்படுத்தப்பட்ட நிறுவனங்களைத் தொழிற்ங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தெரிவித்த திரு டே, அவ்வாறு இல்லாத நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூடுதல் பாதுகாப்புக்காக தொழிற்சங்கத்தில் சேரும்படி திரு டே அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் பொதுவான அளவில் சிங்கப்பூர் திறனாளர்களின் மூலத்தை வலுப்படுத்தும் நடவடிக்கை அனைத்து நிலைகளிலும் எடுக்கப்படவேண்டும் என்று திரு டே வலியுறுத்தினார். நிதிவளம் நிறைந்த சில பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூரர்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்துவதாகத் தங்களைக் காட்டிக்கொள்வதற்காக இளநிலை ஊழியர்களை அதிகம் பணியில் அமர்த்துவதாக திரு டே தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு குறித்த மனப்போக்கும் கலாசாரமும் தலைமை நிர்வாக அதிகாரி முதல் வேலைகளுக்காக ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் நிர்வாகிகள் மற்றும் மனிதவள செயல்முறையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடத்திலும் மாறவேண்டும் என்று அவர் கூறினார்.

(மேல் விவரங்கள், நாளைய அச்சுப்பிரதியில்..)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!