பண நெருக்கடி காரணத்தால் சூதாட்டப் பழக்கமுடைய டான் ஹுவீ ஙோ, 71, மறைந்த திரு லீ குவான் இயூவின் பெயரைப் பயன்படுத்தித் தன் நண்பரிடமிருந்து பணம் பறித்தார். மிதமான அறிவுக் குறைபாடுடைய டான் சொய் கியாங், தமது மத்திய சேமநிதியில் மொத்தமாக வைத்திருந்த $53,000க்கும் மேற்பட்ட சேமிப்புப் பணத்தை 1999ஆம் ஆண்டில் டான் எடுக்க வைத்தார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் திரு டான் தாம் பெற்ற சம்பளத்திலிருந்து $500ஐ தனக்குத் தர வேண்டும் என்றும் டான் ஹுவீ ஙோ அவரிடம் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தட்டு கழுவும் வேலையில் உள்ள டான், அந்தப் பணமெல்லாம் மறைந்த திரு லீக்காக என்று திரு டான் சொய் கியாங்கை ஏமாற்றி இருந்தார். வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் வேலை செய்யும் திரு டான்னிடமிருந்து குறைந்தது $130,000ஐ டான் ஏமாற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டது. 169 மோசடிக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி இன்று டான் ஹுவீ ஙோவுக்கு ஈராண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மறைந்த திரு லீ குவான் இயூவின் பெயரைப் பயன்படுத்தி மோசடி
1 mins read
-

