படிப்படியான சம்பள உயர்வு முறையை ஊக்குவிக்க முயற்சி

குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு தானாக முன்­வந்து படிப்படியாகச் சம்­ப­ளங்­களை உயர்த்தி முன்­னேற்­றப் பாதை­யில் அவர்­களை அழைத்­துச் செல்­லும் நிறு­வ­னங்­கள் புதிய படிப்படியான சம்பள உயர்வு முறை முத்­திரை மூலம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டும் என மனி­த­வள அமைச்­சர் ஜோசஃ­பின் டியோ கூறியுள்ளார்.

படிப்படியான சம்பள உயர்வு முறை என்­பதை குறைந்­த­பட்ச ஊதிய மேம்­பாடு என்று குறிப்­பிட்ட அமைச்­சர், தற்­போது துப்­பு­ரவு, பாது­கா­வல் மற்­றும் நில­வ­னப்பு ஆகிய மூன்று துறை­களில் அது கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ள­தா­கத் தெரிவித்தார்.

உண­வுச் சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம் போன்ற துறை­களும் இது­போன்ற சம்பளமு­றை­யைப் பின்­பற்றி முத்­திரை பதிக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அதி­பர் உரை மீதான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய திரு­வாட்டி டியோ, படிப்படியான சம்பள உயர்வு முறை முத்­திரை நல்­ல­மு­றை­யில் செய­லாற்ற ஒட்­டு­மொத்த சமூ­க மும் ஒன்றிணைந்து ஈடுபடும் விரி­வான நட­வ­டிக்கை இருத்­தல் அவ­சி­யம் என்­றார்.

“குறைந்த வரு­மான ஊழி­யர்­களை ஆத­ரிக்­கும் நிறு­வ­னங்­க­ளின் பொருட்­களை வாங்கி அவற்­றின் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் அத்­த­கைய முற்­போக்கு நிறு­ வ­னங்­க­ளை ஒரு பய­னீட்­டா­ளர் என்ற முறை­யில் நாம் ஆத­ரிக்க முடி­யும். அதற்கு சிறிய அள­வி­லான கூடு­தல் விலை தர­வும் நாம் தயா­ராக இருக்க வேண்­டும்.

“இவ்­வாறு ஆத­ரவு வழங்­கு­வ­தன் மூலம் மேலும் பல நிறு­வ­னங்­கள் படிப்படியாக உயரும் சம்பள முறையைக் கடைப்­பி­டிக்­கத் தொடங்­கும். இதன்­மூ­லம் குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் பல­ன­டை­வார்­கள்,” என்று விளக்­கி­னார் திரு­வாட்டி டியோ.

படிப்படியான சம்பள உயர்வு முறை என்­பது தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சால் கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு முன்­னோ­டித் திட்­ட­மா­கக் கொண்டு வரப்­பட்­டது. ஊழி­யர்­க­ளின் வெவ்­வேறு திறன்­

க­ளுக்கு ஏற்­ற­வாறு குறைந்­த­பட்ச ஊதி­யம் மற்­றும் பயிற்­சிக்­கான தகு­தி­களை இது நிர்­ண­யிக்­கிறது.

துப்­பு­ரவு, பாது­கா­வல் மற்­றும் நில­வ­னப்பு ஆகிய மூன்று துறை­

க­ளைச் சேர்ந்த சுமார் 8,000 ஊழி­யர்­களை இத்­திட்­டம் உள்­ள­டக்கி உள்­ளது.

2022ஆம் ஆண்­டில் மின்­தூக்கி மற்­றும் மின்­ப­டிக்­கட்டு பரா­ம­ரிப்­புத் துறைக்­கும் இந்த சம்பள மு­றை­யைக் கட்­டா­ய­மாக்க கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முன்­ன­தாக அர­சாங்­கம், தொழிற்­சங்­கம், முத­லா­ளி­கள் என்­னும் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் முயற்­சி­களை மேற்­கொண்­ட­தாக திரு­வாட்டி டியோ­வுக்கு முன்­ன­தா­கப் பேசிய என்­டி­யுசி துணை தலை­மைச் செய­லா­ளர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

அத்­து­டன் கழிவு நிர்­வா­கத் துறை­யி­லும் இதனை அமல் செய்­வ­தற்­கான சாத்­தி­யத்தை தொழி­லா­ளர் இயக்­கம் ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

“மேலும் மேலும் பல துறை­கள் படிப்படியான சம்பள உயர்வு முறை­யைப் பின்­பற்­ற­வேண்­டும் என கட்­டா­ய­மாக்­கு­வது தற்­போ­துள்ள சூழ­லில் ஓர் இடை­யூ­றாக அமை­ய­லாம். என­வே­தான் நிறு­வ­னங்­கள் தானா­கவே முன்­வ­ரு­வதை அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கிறது.

“முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து அறி­மு­கம் செய்­யப்­படும் முத்­திரை அங்­கீ­கா­ரத்­தின் பின்­னணி இதுவே,” என்­றார் திரு­வாட்டி டியோ.

ஏற்­கெ­னவே கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்ள மூன்று துறை­க­ளி­லும் கடந்த ஐந்­தாண்­டு­களில் ஒட்­டு­மொத்த ஊதிய வளர்ச்சி 30 விழுக்­காடு காணப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!