சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் ஐந்து வயதாக இருந்தபோது அவருக்கு கற்பித்த மலாய் மொழி ஆசிரியர் ஹஜ்ஜி முகம்மது அமின் ஷாஃபாவி நேற்று முன்தினம் (செப்டம்பர் 1ஆம் தேதி) காலமானார். அவருக்கு 84 வயது.
இவர் அமரரான செய்தியைக் கேட்டறிந்த திரு லீ, இவரைப் பற்றிய பதிவைத் தமது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார்.
மலாய் மொழி மீதான திரு அமினின் ஆர்வம் தம்மையும் பிற மாணவர்களையும் உற்சாகப்படுத்தியதாகக் கூறிய திரு லீ, மொழியாற்றலுக்கான நல்ல அடித்தளத்தை அவர் வாழ்நாள் முழுவதற்கும் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறினார்.
திரு லீயின் பதிவில் அவர்கள் இருவரையும் காட்டும் படம், இவ்வாண்டு நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டது.

