தயாரà¯à®¨à®¿à®²à¯ தà¯à®à®¿à®¯ à®à¯à®µà¯à®¯à®¾à®³à®°à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© தனிநபர௠à®à®à®²à¯à®±à¯à®¤à®¿à®à¯ à®à¯à®¤à®©à¯à®à®³à¯à®®à¯ (à®à®ªà®¿à®ªà®¿à®à®¿) à®®à¯à®à®¾à®®à¯ பயிறà¯à®à®¿à®¯à¯à®®à¯ (à®à®à®¿à®à®¿) à®à®à¯à®à¯à®ªà®°à¯ மாததà¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à®à¯à®à®à¯à®à®®à®¾à® தà¯à®à®°à¯à®®à¯ à®à®©à¯à®±à¯ தறà¯à®à®¾à®ªà¯à®ªà¯ à®à®®à¯à®à¯à®à¯ à®à®±à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முகாம் பயிற்சிக்கு வரும் தேசிய சேவையாளர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும். இதன்மூலம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு அமைச்சு இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து வெவ்வேறு முகாம்களில் உள்ள உடலுறுதி சோதனை மையங்கள் மீண்டும் திறக்கப்படும். தேசிய சேவையாளர்களின் நலனைக் கருதி தனிநபர் உடலுறுதிச் சோதனைகள் சிறியளவில் நடத்தப்படும் என்று அமைச்சு கூறியது.

