கையில் கிருமி நாசினி தடவிய பின்னர் அடுப்பை பற்றவைத்த பெண் தீப்பிடித்து பலி

கையில் கிருமி நாசினி தடவிய பின்னர் அடுப்பை பற்றவைத்த பெண் தீப்பிடித்து பலி

1 mins read
74f9d1c9-dac4-4efc-a8c3-193616bfa62a
-

விருதுநகர்: கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் அடுப்பைப் பற்ற வைத்த பெண் தீ விபத்தில் உயிரிழந்தார். விருதுநகரைச் சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி சோலையம்மாள் (வயது 36)

கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28ஆம் தேதி மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார் சோலைராஜ். அச்சமயம் வீட்டில் இருந்த கிருமி நாசினியை எடுத்து தன் கை கால்களில் தடவிக்கொண்டிருந்தார் சோலையம்மா.

கணவர் தேநீர் கேட்டதும் சமையலறைக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்தபோது திடீரென அவரது உடலில் தீப்பற்றியது. அடுத்த சில நொடிகளில் உடல் முழுவதும் தீ பரவியது.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு சமையலறைக்கு ஓடிச் சென்ற சோலைராஜ் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். படுகாயமடைந்த சோலையம்மாள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.