அமைச்சர் சுன்: நியாயமான, நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்க கல்வியே திறவுகோல்

2 mins read
e05b5956-3cb2-45bd-8509-daad054e300d
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ஒரு நியா­ய­மான, நேர்­மை­யான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமூ­கத்­தைக் கொண்­டி­ருக்க நமது கல்வி முறை ஒரு திற­வு­கோலாக இருக்க வேண்­டும் என்று கல்வி மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் தெரி­வித்­துள்­ளார்.

அதி­பர் உரை மீதான விவா­தத்­தில் நேற்று பேசிய திரு­வாட்டி சுன், சமூக அள­வில் அனை­வ­ருக்­கும், குறிப்­பாக குறைந்த வாய்ப்­பு­க­ளு­டன் வாழ்க்­கை­யைத் தொடங்­கி­ய­வர்­க­ளுக்கு, அனை­வ­ருக்­கும் உள்ள சம அள­வி­வான வாய்ப்­பு­கள் தங்­க­ளுக்­கும் கிடைக்­கும் என்ற நம்­பிக்­கையை உரு­வாக்க உத­வக்­கூ­டிய வகை­யில் கல்வி எப்­போ­தும் இருந்து வந்­துள்­ளது என்­றும் விளக்­கி­னார்.

"தங்­களை மட்­டும் நினைத்­துக்­கொண்டு சுய­மா­கப் பூர்த்தி செய்து­ கொள்­ளும் மனப்­பான்மை சிங்­கப்­பூ­ரில் இருக்­கக்­கூ­டாது என்று நமது சமூக உணர்­வு­கள் அறி­வு­றுத்­து­கின்­றன என்று நம்­பு­கி­றேன். தாங்­கள் மட்­டுமே பயன் அடைய வேண்­டும் என்ற மனப்­போக்கு நம்­மி­டைய பிளவை ஏற்­ப­டுத்தி, ஒன்­றி­ணைந்து செயல்­படும் நமது வழக்­கத்­துக்கு ஊறு விளை­வித்­து­வி­டும்.

"ஒன்­று­பட்ட மக்­கள் என்ற முறை­யில், நாம் நியா­ய­மான, நேர்­மை­யான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமூ­கத்­துக்­காக பாடு­பட வேண்­டும். அதன் மூலம் அனை­வ­ருக்­கும், அவர்­கள் எந்த பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்­தா­லும் சம­மான வாய்ப்­பு­கள் கிட்­டும்.

"இதன் தொடர்­பில் அர­சாங்­கம் பாலர்­பள்­ளிக்­கான கட்­ட­ணக் கழிவு­ க­ளை­யும் அர­சாங்­க ஆத­ர­வில் நடத்­தப்­படும் பாலர்­பள்ளி­களில் இடங்­க­ளை­யும் உயர்த்­தி­யுள்­ளது. சில பாலர்­பள்­ளி­கள் தங்­கள் கட்­ட­ணங்­க­ளைக் குறை­வாக வைத்­துக்­கொள்­வ­தற்கு அர­சாங்­கம் நிதி­யா­த­ரவு வழங்­கு­கிறது," என்று திரு­வாட்டி சுன் விவ­ரித்­தார்.

இவை அனைத்­தை­யும் ஒன்று சேர்த்­துப் பார்த்­தால், பாலர் பரு­வக் கல்­விக்கு அர­சாங்­கம் எந்த அள­வுக்கு ஆத­ரவு அளிக்­கிறது என்­ப­தும் ஒவ்­வொரு பிள்­ளைக்­கும் நல்ல எதிர்­கா­லம் அமைய அவர்­க­ளுக்கு சிறு வய­தி­லேயே நல்ல கல்­வித் தொடக்­கம் இருப்­பது மிக முக்­கி­யம் என்­பதை மன­திற்­கொண்டு செயல்­ப­டு­வ­தும் தெளி­வா­கத் தெரி­யும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

இதற்­கி­டையே, பாலர்­பள்­ளி­களில் இன்­னும் அதி­க­மான பிள்­ளை­கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு என்ன செய்­ய­லாம் என்­பதை அர­சாங்­கம் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்ட திரு­வாட்டி சுன், பாலர்­பள்­ளி­களில் இன்­னும் சேராத பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் சுட்­டி­னார்.

இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீ்ர்வு காண, இன்­னும் அதி­க­மான சமூ­கப் பங்­கா­ளி­கள் 'கிட்ஸ்­டார்ட்' திட்­டத்­தில் தங்­களை இணைத்­துக்­கொள்ள வேண்­டும். இதன் மூலம் குறைந்த வரு­மானமுடைய குடும்­பங்­களில் உள்ள ஆறு வயது வரை­யி­லான பிள்­ளை­க­ளுக்கு உதவி கிடைக்க வழி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மேலும் சிறப்­புத் தேவை­யு­டைய பிள்­ளை­க­ளுக்கு, சாதா­ரண மற்­றும் சிறப்­புப் பள்­ளி­களில் தர­மான, கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய கல்வி கிடைப்­பதை அர­சாங்­கம் உறுதி செய்­யும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.