வீவக மறுவிற்பனை வீட்டுக்கு தேவை வலுவாக இருக்கிறது

பிப்ரவரிக்குப் பிறகு விலை அதிவேகமாகக் கூடியது ஆகஸ்ட்டில்தான்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மறு­விற்­பனை வீடு­க­ளுக்­கான தேவை கடந்த ஆகஸ்­டில் தொடர்ந்து வலு­வாக இருந்­தது.

அதே­வே­ளை­யில், பிப்­ர­வ­ரிக்­குப் பிறகு ஆகஸ்­டில்­தான் அத்­த­கைய வீடு­களின் மாதாந்­திர விலை ஆக வேகமா­கக்­ கூ­டி­யது. கைமா­றிய வீவக மறு­விற்­பனை வீடு­க­ளிள் எண்­ணிக்கை ஜூலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஆகஸ்ட்­டில் 1.4% குறை­வு­தான். ஆனால் சென்ற ஆண்டு இதே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், கடந்த ஆகஸ்­டில் 23.5 விழுக்­காடு அதிக வீடு­கள் விற்­கப்­பட்­டன.

மொத்­தத்­தில் ஆகஸ்­டில் 2,435 வீவக மறு­விற்­பனை வீடு­கள் விற்­கப்­பட்­ட­தாக நிலச்­சொத்து இணைய வாச­லான எஸ்ஆர்­எக்ஸ் நிறு­வன­மதிப்­பீ­டு­கள் தெரி­விக்­கின்­றன.

சென்ற மாதம் விற்­கப்­பட்ட வீவக வீடு­களில் 40.3 விழுக்­காடு நாலறை வீடு­கள், 26 விழுக்­காடு ஐந்­தறை வீடு­கள். மொத்­தம் 23.2 விழுக்­காடு மூவறை வீடு­கள் கைமாறின. விற்­கப்­பட்ட வீடு­களில் 8.8 விழுக்­காடு வீடு­கள் எக்­ஸி­கி­யூட்­டிவ் வீடு­க­ளா­கும். மற்­றவை பல தலை­முறை மற்­றும் ஈரறை வீடு­கள்.

இத­னி­டையே, ஆகஸ்ட் 19 முதல் செப்­டம்­பர் 16 வரை சீனர்­கள் கொண்­டா­டும் ‘ஹங்ரி கோஸ்ட்’ விழா இடம்­பெற்­றா­லும்கூட சென்ற மாதம் வீவக மறு­விற்­பனை வீடு­களுக்குத் தேவை வலு­வாக இருந்­தது என்று ஆரஞ்சு டீ & டை நிறு­வ­னத்­தின் ஆய்வு ஆலோ­சனைப் பிரி­வுத் தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்­தார்.

ஹங்ரி கோஸ்ட் விழா­வின் போது பொது­வாக விற்­ப­னை­கள் மந்­த­மாக இருக்­கும். வீவக மறு­விற்­பனை வீடு­க­ளுக்குக் கடந்த மூன்று மாத­மாக தொடர்ந்து தேவை அதி­க­மாக இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நிலைப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் மறு­விற்­ப­னைச் சந்தை மெது­வாக மீட்சி காண முடி­யும் என்று அவர் தெரி­வித்­தார்.

ஜூலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஆகஸ்ட் மாத மறு­விற்­பனை விலை­யில் 0.7% அதி­க­ரித்தது. முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­களில் விலை­கள் ஆண்டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 3.3% கூடின.

அதே­வே­ளை­யில், முதிர்ச்­சி­அடைந்த பேட்­டை­களில் இந்த அதி­க­ரிப்பு 0.2 விழுக்­கா­டாக இருந்­தது. மறு­விற்­பனை விலை­ சென்ற ஆண்டு ஆகஸ்ட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஆகஸ்ட்­டில் 2.1 விழுக்­காடு அதி­கமாக இருந்­தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட்­டில் பின்­னக்­கல் @ டக்ஸ்­டன் புளோக்­கில் உள்ள ஓர் ஐந்­தறை வீடு ஆகஸ்ட் மாதம் $1,185,000 விலைக்கு கைமா­றி­யது.

ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதிக விலை­யில் விற்­கப்­பட்ட வீவக ஐந்து மறு­விற்­பனை வீடு­களில் அது ஒன்­றா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!