4 வயது மகள் கொலை: இருவருக்கு விசாரணைக் காவல் நீட்டிப்பு

2 mins read
c8e6b8b0-f843-46c1-a22f-6760637c62e7
கோப்புப்படம்: லியன்ஹ சாவ்பாவ் -

மேகன் குங் யு வெய் என்ற நான்கு வயது சிறு­மியைக் கொலை செய்­த­தா­கக் கூறப்­படும் இரண்டு பேர் மேலும் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அந்தச் சிறு­மி­யின் தாயா­ரான ஃபூ லி பிங், 24, என்­ப­வ­ரும் வோங் ஷி ஸியாங், 33, என்­ப­வ­ரும் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார்­கள். சிறு­மியை இந்த இரு­வ­ரும் கொலை செய்து இருக்­கி­றார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

இரு­வ­ரும் செப்­டம்­பர் 30ஆம் தேதி மறு­ப­டி­யும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார்­கள்.

இரு­வ­ருக்­கும் பிணை மறுக்­கப்­பட்டு இருக்­கிறது.

லிம் ஆ ஊ ரோட்­டில் இருக்­கும் ஒரு கூட்­டு­ரிமை அடுக்­கு­மாடி வீட்­டில் இந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் அந்த இரு­வ­ரும் சிறு­மியைக் கொலை செய்து இருக்­கி­றார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

சிறு­மி­யின் உடலை அவர்­கள் நொவிலி சுவா ரோஷி, 30, என்ற வேறு ஒரு மாது­டன் செயல்­பட்டு உபி அவென்யூ 1ல் இருக்­கும் பாயா உபி தொழிற்­பேட்­டை­யில் உலோக தோம்பு ஒன்­றில் மே மாதம் எரித்து உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சுவா ரோஷி மீது கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­ப­ட­வில்லை. அவ­ருக்­குச் சென்ற மாதம் $50,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்­டது.

சுவா ரோஷியை மேற்­கொண்­டு விசா­ர­ணைக் காவ­லில் வைக்க வேண்­டும் என்று அர­சி­னர் தரப்பு கோரிக்கை விடுத்­தது. அதை தற்­காப்பு வழக்­க­றி­ஞ­ரான தங்­க­வேலு எதிர்த்து வாதிட்­டார்.

தன் கட்­சிக்­கா­ரர் கொலைக் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­க­வில்லை என்­ப­தால் அவரை இதர இரண்டு பேரு­டன் சேர்க்­கா­மல் தனித்து கையாள வேண்­டும் என்று டிரை­டென்ட் லா கார்ப்­ப­ரே­ஷன் என்ற சட்ட நிறு­வ­னத்­தைச் சேர்ந்த தங்­க­வேலு வாதிட்­டார்.

சுவா ரோஷி­யின் வழக்கு அக்­டோ­பர் 6ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

கொலைக் குற்­றம் சுமத்­தப்­பட்டு இருக்­கும் வோங் அந்த குற்­றச்­சாட்­டு­டன் தொடர்­பில்­லாத வேறு குற்­றச்­சாட்­டின் பேரில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாகி இருக்­கி­றார். போதைப்­பொ­ருள் தொடர்­பான பல குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ல் இருக்­கும் அடுக்­கு­மாடி வீட்­டில் இரண்டு சமு­ராய் கத்­தி­களை வோங் வைத்­தி­ருந்­தார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அதே வீட்­டில் அவர் ஆட­வர் ஒரு­வரைத் தாக்கி இருக்­கி­றார் என்­றும் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு இருக்­கிறது.