டெங்கி பாதிப்புச் சம்பவங்கள் குறைந்தன

டெங்கி பாதிப்புச் சம்பவங்கள் குறைந்தன

1 mins read

சிங்கப்பூரில் டெங்கியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் சற்று குறைந்தது.

கடந்த வாரம் 1,155 டெங்கி சம்பவங்கள் பதிவாயின. இது அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான எண்ணிக்கையான 1,288ஐ காட்டிலும் சற்றுக் குறைவு.

நகர மன்றங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கொசுப்பெருக்கம் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் 50 விழுக்காடு குறைந்துள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது. இருப்பினும், டெங்கியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில்தான் உள்ளது. டெங்கியைக் கட்டுக்குள் வைத்திருக்க சிங்கப்பூர் முழுதும் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 638,000க்கும் அதிகமான இடங்களில் வாரியம் சோதனை மேற்கொண்டது.

இந்த ஆண்டில்தான் ஆக அதிகமான டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு தொடங்கி 35 வாரங்களில் 27,281 சம்பவங்கள் பதிவாகின. இதற்கு முன் 2013ஆம் ஆண்டில் 22,170 சம்பவங்கள் பதிவானதாக வாரியம் தெரிவித்தது.