சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் இருந்து பணிப்பெண் விடுவிப்பு

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் லியூ முன் லியோங் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த குமாரி பார்த்தி லியானி, அவரது வீட்டில் $34,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திரு லியூவின் வீட்டில் 2007 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணிப்பெண்ணாக இருந்த குமாரி பார்த்தி, அந்தக் குற்றச்சாட்டுக்காக தனக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு, இரு மாத சிறைத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.

சட்ட விரோதமாக அமர்த்தப்பட்டதன் தொடர்பில் அந்தப் பெண் புகார் அளிப்பதைத் தடுப்பதற்காக, அந்தப் பெண்ணின் மீது குற்றம் சாட்டப்பட்டதாக, அந்தப் பெண்ணின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அனில் பால்சந்தானி குறிப்பிட்டார்.

திரு லியூவின் வீட்டில் பணி புரிந்தது தவிர, அவரது அலுவலகம் மற்றும் திரு லியூவின் மகன் கார்லின் வீட்டிலும் பணிபுரியுமாறு இந்தோனீசியரான குமார் பார்த்தி பணிக்கப்பட்டதாக திரு பால்சந்தானி தெரிவித்தார்.

குமாரி பார்த்தி திருடியதாகக் கூறப்படும் பொருட்கள் தொடர்பாக திரு லியூவின் குடும்பத்தார் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததாகவும் திரு கார்ல் லியூவின் வாக்குமூலம் சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக குமாரி பார்த்தி வேலைக்குச் செல்லாததைக் குறிப்பிட்ட திரு பால்சந்தானி, அவருக்கு இழப்பீடு கோருவதன் தொடர்பில் விண்ணப்பிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!