தொழில்நுட்பத்தில் சாதித்து, குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ள நூறு பெண்களின் பட்டியல் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது.
‘தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் பெண்கள்’ இயக்கத்தின் புரவலரும் மனிதவள அமைச்சருமான திருவாட்டி ஜோசஃபின் டியோ, இன்று நடந்த ஓர் இணையவழிக் கருத்தரங்கின்போது அப்பட்டியலை வெளியிட்டார்.
தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மீடியாகார்ப் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் கணினிச் சங்கம் அப்பட்டியலைத் தயாரித்தது.