நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புக்கு ஒப்புதல்

2 mins read
75167ddd-282c-496e-a86f-9b155877a809
படம்: GOV.SG -

நாடா­ளு­மன்ற நிகழ்ச்­சி­களை நேரடி­யாக ஒளி­ப­ரப்ப கொள்கை அளவில் அர­சாங்­கம் ஒப்­புக்­கொண்டு இருக்­கிறது. தொடர்­புத் தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இதனை அறி­வித்­தார்.

இதன் தொடர்­பி­லான தொழில்­நுட்ப மற்­றும் அம­லாக்க விவ­ரங்­களைத் தமது அமைச்சு ஆரா­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற நிகழ்ச்­சி­களை நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பு­வ­தன் தொடர்­பில் அர­சாங்­கம் ஏற்­கெ­னவே கொண்­டுள்ள ஐயப்­பா­டு­களை இன்­ன­மும் கொண்­டி­ருக்­கிறது என்று குறிப்­பிட்ட அவர், இருந்­தாலும் உலக அள­வி­லும் தொழில் நுட்­பத் துறை­யி­லும் இடம்­பெற்று வரும் புதிய போக்­கு­க­ளைச் சுட்டிக்காட்டினார்.

அத்­த­கைய புதிய போக்­கு­கள் இணைய ஒளி­ப­ரப்­பு­களைப் பொது இட­மாக ஆக்கி இருக்­கின்­றன. இதர நாடு­க­ளைச் சேர்ந்த நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேர­டி­யாக மன்ற நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தைக் காண முடி­கிறது என்­றும் திரு ஈஸ்­வ­ரன் கூறினார்.

நாடா­ளு­மன்­றம் என்­பது தேசிய விவ­கா­ரங்­க­ளைப் பற்றி மிக முக்­கிய கவ­னத்­து­டன் விவா­திப்­ப­தற்­கான ஓர் அரங்­கா­கும். நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெ­றும் விவா­திப்பு­கள் மும்­மு­ர­மாக இருக்க வேண்­டும்.

இருந்­தா­லும் தொனி விவே­க­மாக இருக்க வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அக்­க­றைக்­கு­ரிய அம்­சங்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் குரல் எழுப்­பப்­ப­டு­கின்­றன. கேள்­வி­கள் கேட்­கப்­ப­டு­கின்­றன.

அவற்­றுக்குப் பதில்­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை மக்­க­ளுக்கு எடுத்­துக்­காட்ட உறுப்­பி­னர்­கள் விரும்­பு­கி­றார்­கள் என்­ப­தால் உயி­ரோட்­ட­மிக்க, ஆர்­வ­மிக்க விவா­திப்­பு­கள் தவிர்க்க முடி­யா­தவை என்­றும் அவை தேவை­யா­ன­தா­கக் கூட இருக்க முடி­யும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் உறுப்­பி­னர்­கள் பிரச்­சி­னை­க­ளை­யும் அவற்­றின் சிக்­க­லான நில­வ­ரங்­க­ளை­யும் நன்கு புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­பதையும் வெறு­மனே குரல் கொடுப்­பதில் பய­னில்லை என்­பதையும் புரிந்து­கொள்ள வேண்டி­யது முக்­கி­ய­ம் என்றாரவர்.