6 மாதங்களில் 5,280 குடிமக்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்

2 mins read
08685e1f-3cc4-4bd1-b5e2-2724079a226f
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: GOV.SG -

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் ஜூன் மாதத்­துக்­கும் இடை­யில் 5,280 குடி­மக்கள் ஆட்­கு­றைப்­புக்கு ஆளாகி இருக்­கிறார்­கள் என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

செங்­காங் குழுத் தொகுதி பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­ன­ருக்குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி டியோ, அதே கால­கட்டத்­தில் 11,000 சிங்­கப்­பூ­ரர்­கள் சம்பளம்­இல்லா விடுப்­பில் சென்­றார்­கள். இப்­படி விடுப்பு அளிக்­கப்­பட்ட குடி­மக்­க­ளாக அல்­லாத மற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை 33,000 என்று அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கட்­டுப்­பாட்டு நட­வடிக்­கை­கள் தொடங்­கி­யது முதல் 50 விழுக்­காட்­டுக்­கும் அதிக அள­வுக்குச் சம்­ப­ளம் குறைக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­களை பற்றி பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் ஹி டிங் ரு கேட்­டி­ருந்­தார். இதற்­குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி டியோ, பாதிக்­கும் அதிக அளவு சம்­ப­ளம் இழந்த ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை ஆகஸ்ட் 20 நில­வரப்­படி குறை­வு­தான் என்­றார்.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் இரு­வ­ருக்­கும் இடை­யிலான இத்­த­கைய புள்­ளி­வி­வ­ரங்­களை முத­லா­ளி­கள் தங்­க­ளு­டைய தக­வல்­களில் பிரித்து தெரி­விப்ப தில்லை என்­ப­தால் அவற்றைத் தெரி­விக்க இய­ல­வில்லை என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

வேலை­யி­ழந்த 50க்கும் அதிக வய­துள்ள ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் அவர்­கள் மீண்டும் வேலை பெற சரா­ச­ரி­யாக எவ்­வளவு காலம் பிடித்­தது என்­ப­தை­யும் அங் மோ கியோ குழுத் தொகுதி உறுப்­பி­னர் திரு­வாட்டி இங் லிங் லிங் கேட்­டார்.

இந்த ஆண்டு ஜூன் நில­வ­ரப்­படி வேலை­யில்­லாத சிங்­கப்­பூர் ­வா­சி­கள் 90,500 பேர் இருந்­த­னர் என்­றும் இந்த எண்­ணிக்கை சென்ற ஆண்டு டிசம்­ப­ரு­டன் ஒப்­பி­டும்­போது 16,600 அதி­கம் என்­றும் குறிப்­பிட்­டார்.

50 அதற்கும் அதிக வயதுள்ள சிங்கப்பூர்வாசிகள் வேலையில்லாமல் இருந்த காலம் 12 வாரம் என்று ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

இதுவரையில் 95,000 வேலைகள், பயிற்சி வாய்ப்புகள், வேலை அனுபவ வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வேலை தேடிய 25,000க்கும் அதிக மக்களை வேலைகளிலும் ஊதியத்துடன் கூடிய பயிற்சியிலும் தேர்ச்சிப் பயிற்சியிலும் அமைச்சு சேர்த்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.