'ஊழியர் சேர்ப்பில் பாரபட்சம் காட்டும் நிறுவனங்களின் பெயரை வெளியிட்டால் எதிர் விளைவு ஏற்பட்டுவிடும்'

'ஊழியர் சேர்ப்பில் பாரபட்சம் காட்டும் நிறுவனங்களின் பெயரை வெளியிட்டால் எதிர் விளைவு ஏற்பட்டுவிடும்'

2 mins read
d204ece1-690d-45ce-88c6-0deb537d5ecc
சிங்­கப்­பூ­ரில் ஆட்­களை வேலை­யில் சேர்க்­கும்போது பார­பட்­சத்­து­டன் நடந்துகொள்­வதா­கக் சந்­தே­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­களின் பெயர்­க­ளைக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் வெளியிட்டால் எதிர்­விளை­வு­கள் ஏற்­படும் என்று மனிதவள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். படம்: GOV.SG -

சிங்­கப்­பூ­ரில் ஆட்­களை வேலை­யில் சேர்க்­கும்போது பார­பட்­சத்­து­டன் நடந்துகொள்­வதா­கக் சந்­தே­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­களின் பெயர்­க­ளைக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் வெளியிட்டால் எதிர்­விளை­வு­கள் ஏற்­படும் என்று மனிதவள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அப்­ப­டிச் செய்­தால் அது அத்­த­கைய சந்­தேக நிறு­வ­னங்­கள் உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்க எடுக்­கும் முயற்சி­களைப் பாதித்­துவி­டும் என்று அவர் குறிப்­பிட்­டார். அதி­பர் உரை மீதான விவா­தம் நேற்று நடா­ளு­மன்­றத்­தில் ஐந்­தா­வது நாளாக நடந்­தது.

ஊழி­யர்­க­ளைச் சேர்க்­கும்போது பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ள­வ­தாக சந்­தே­திக்­கப்­படும் நிறு­வ­னங்­க­ளின் பெயர்­களைக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் வெளி­யி­டு­மாறு மன்­றத்­தில் பல உறுப்­பி­னர்­கள் கோரிக்கை விடுத்­த­தற்­குப் பதில் அளித்து அமைச்­சர் பேசி­னார்.

வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த பட்­டத்­தொழி­லர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள், நிபு­ணர்­கள் (பிஎம்­இடி) ஆகி­யோரை அதிக விகி­தாச்­சா­ரத்­தில் கொண்­டுள்ள 400 நிறு­வ­னங்­கள் இப்­போது அந்­தக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் உள்­ளன.

இருந்­தா­லும் அந்த நிறு­வ­னங்­கள் எந்த விதி­யை­யும் மீற­வில்லை என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார். சில முத­லா­ளி­க­ளுக்கு உள்­ளுர் ஆள்சேர்ப்பு வழி­கள் பற்றி உண்­மை­யி­லேயே தெரி­ய­வில்லை அல்­லது வெளி­நாட்­டில் செயல்­படும் தலை­மை­ய­கங் கள் பிறப்­பித்­துள்ள உத்­த­ர­வு­க­ளுக்கு ஏற்ப அத்­த­கைய ஆட்­சேர்ப்­பு­கள் வரம்­புக்குட் பட்டுள்ளன என்­பது புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

அவை செய்த எம்ப்­ளாய்­மெண்ட் பாஸ் மனுக்­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்டு அதே­வே­ளை­யில் அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளு­டன் அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொண்டு ஊழி­யர் வள நடை­மு­றை­களை மேம்­ப­டுத்த உத­வு­கி­றார்­கள். பல நிறு­வனங்­கள் ஓராண்­டுக்­குள்­ளேயே அந்­தக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் இருந்து வெளி­யே­றி­விட்­டன என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

விதி­களை மீறி­ய­தற்­காக இந்த ஆண்­டில் 90 முத­லா­ளி­கள் வெளி­நாட்­டி­னரை வேலையில் அமர்த்து வதற்­கான சலு­கை­களை இழந்­து­விட்­ட­னர் என்றார் அவர்.

அந்­தக் கண்­கா­ணிப்­புப் பட்­டி­ய­லில் அர­சாங்­கம் தொடர்­பு­டைய தெமா­செக் தொடர்­பான நிறு­வ­னங்­கள் எது­வும் இல்லை என்­றும் அந்தப் பட்­டி­ய­லில் இருந்து வெளி­யேற வேண்டி இருக்­கின்ற நிறு­வ­னங்­கள் 10%க்கும் குறைவு என்­றும் அமைச்சர் கூறி­னார்.