சிறிய அளவிலான நேரடி நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் 11ஆம் தேதி முதல் அனுமதி

சிறிய அளவிலான நேரடி நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் 11ஆம் தேதி முதல் அனுமதி

1 mins read
80c47fc8-0606-4b11-8177-5d8c0f6788fb
கோப்புப்படம் -

இம்மாதம் 11ஆம் தேதியில் இருந்து குறிப்பிட்ட இடங்களில், சிறிய அளவில் நேரடி நிகழ்ச்சிகளை நடத்தலாம் என தேசிய கலைகள் மன்றம் அறிவித்துள்ளது.

தேசிய கலைகள் மன்றம், எஸ்பிளனேட், சிங்கப்பூர் சீன இசைக்குழு, ஆர்ட்ஸ் ஹவுஸ், சிங்கப்பூர் பல்லிய இசைக்குழு, சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையம், ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிடெட் ஆகிய அமைப்புகள் நிர்வகிக்கும் அரங்குகளில் இந்த வரம்புக்குட்பட்ட முன்னோட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கலாம். பார்வையாளர்களிடத்தில் பாதுகாப்பு இடைவெளி விதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கும் இடையே எவ்விதக் கலந்துறவாடலும் இடம்பெற அனுமதியில்லை.