சிங்கப்பூரில் புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் இருவர் வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி இங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் வேலை அனுமதி அட்டைகளைக் கொண்டுள்ளவர்கள் என்று சுகாதார அமைச்சு கூறியது.
புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரில் பதிவான கொவிட்-19 கிருமித்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 56, 982க்கு உயர்ந்துள்ளது.

