விமானத்தின் இறக்கை மீது திடீரென ஏறிய பெண்

விமானத்தின் இறக்கை மீது திடீரென ஏறிய பெண்

1 mins read
f7a453a3-faee-4094-a79f-0d2cfb7509c0
-

உள்ளே வெப்பமாக இருந்ததால் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து அதன் இறக்கையின் மீது ஏறிய பெண்ணை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தனது விமானங்களில் இனிமேல் பயணம் செய்ய தடை செய்திருக்கிறது.

கீவ்வின் உக்ரேன் நகரில் தரையிறங்கி அதன் பயணிகள் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண், எவரும் எதிர்பாராத விதமாக அந்த இறக்கை மீது ஏறிக்கொண்டார். துருக்கியைவிட்டு புறப்பட்ட அந்தப் பெண் தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருந்ததாக தி சன் செய்தித்தாள் தெரிவித்தது.

தரையிலிருந்து விமான;g பணியாளர்கள் அந்தப் பெண்ணிடம் பேசிய பின்னர் அவர் விமானத்திற்குள் சென்றதாக காணொளிப்பதிவு ஒன்று காட்டுகிறது. அந்தப் பெண் போதைப்பொருளோ மதுபானமோ உட்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.