வேண்டுமென்றே தீ மூட்டியதாக 53 வயது ஆடவர் கைது

வேண்டுமென்றே தீ மூட்டியதாக 53 வயது ஆடவர் கைது

1 mins read
7ed4d8eb-a921-48db-aa71-1dd4983f67ea
-

ஒரு கட்டடத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீ மூட்டி குறும்புச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 53 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.

மண்டாய் எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தில் ஓர் இடத்தில் தீ எரிவதாக போலிசுக்கு இம்மாதம் 2ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்குத் தகவல் கிடைத்தது. அதில் யாரும் காயம் அடையவில்லை. தீ வேண்டுமென்றே மூட்டப்பட்டது தெரியவந்தது. போலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவு அதிகாரிகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு 72 மணி நேரத்தில் சந்தேக ஆடவரை அதிகாரிகள் கைது செய்தனர். புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் அறிக்கையில் தெரிவித்தது. இத்தகைய குற்றத்துக்கு ஆயுள் அல்லது 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க முடியும்.