பாலியல் தொல்லை புகார்களை மறுக்கும் பேராசிரியர்

பாலியல் தொல்லை புகார்களை மறுக்கும் பேராசிரியர்

2 mins read
f1f23ee0-5135-430e-af2f-919ba0954969
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக கிழக்கு ஆசி­யப் பயி­ல­கத்­தின் முன்­னாள் இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் ஸெங் யோங்னியான், 58, தனக்கு எதி­ராகக் கூறப்­படும் பாலி­யல் தொல்லை புகார்­கள் அனைத்­தை­யும் மறுத்து இருக்­கிறார்.

இருந்­தா­லும் அத்­த­கைய புகார்கள் பற்றி பல்­க­லைக்­க­ழ­கம் தொடர்ந்து புலன்­வி­சா­ர­ரணை நடத்தி வரு­கிறது. சமூக ஊட­கத்­தில் அவருக்கு எதிராக இதுபோன்ற பல்­வேறு புகார்­கள் சென்ற மாதம் தலை­தூக்­கின.

அவற்றைத் தெரி­வித்­த­வர்­களில் குறைந்­தது இரண்டு பேர் அந்த முன்­னாள் இயக்­கு­ந­ருக்கு எதி­ராக பாலி­யல் தொல்லை குற்றப் புகார் களைச் சுமத்­தி­னார்­கள்.

இருந்­தா­லும் பேரா­சி­ரி­யர் ஸெங் எல்லா புகார்­க­ளை­யும் திட்­ட­வட்­ட­மாக மறுத்து இருக்­கி­றார் என்று அவ­ரு­டைய வழக்­க­றி­ஞர்­கள் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்டு இருக்­கி­றார்­கள்.

பேரா­சி­ரி­யர் ஸெங்­கிற்கு எதி­ராக பாலி­யல் தொல்லை புகார்­களைச் சமூக ஊட­கத்­தில் குறிப்­பிட்ட இரண்டு பேர், என்­யு­எஸ் அல்­லது இஏஐ ஊழி­யர் என்று தங்­க­ளைத் தெரி­வித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

பேரா­சி­ரி­யர் ஸெங் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருந்­தும் அத­னு­டைய கிழக்கு ஆசிய பயி­ல­கத்­தில் இருந்­தும் வில­கி­விட்­டார்.

அதற்­கும் பேரா­சி­ரி­ய­ருக்கு எதி­ரான குறை­கூ­றல்­க­ளுக்­கும் புகார்­களுக்­கும் தொடர்பு இல்லை என்­றும் சமூக ஊட­கங்­க­களில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் புதிய பதவி ஒன்றை ஏற்­றுக்­கொண்டு அதற்கு வசதியாக பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருந்து விலகிக்கொண்டு இருக்­கி­றார் என்று அவர்­கள் தெரி­வித்­தார்­கள்.

கிழக்கு ஆசி­யப் பயி­ல­கத்­தின் நடப்பு ஊழி­யர் என்று தன்னை கூறிக்­கொண்ட ஒரு­வர், 2019 மே மாதம் போலி­சில் புகார் ஒன்­றைத் தாக்­கல் செய்­தார். 2018 மே மாதம் பாலி­யல் ரீதி­யில் அந்­தப் பேராசிரியர் தன்னை தொல்லைப் படுத்தியதாக அவர் குறிப்­பிட்­டார்.

போலி­சில் புகார் தாக்­க­லா­னதை பல்­க­லைக்­க­ழ­க­மும் போலி­சும் உறு­திப்­ப­டுத்­தின. இந்த விவ­கா­ரத்­தில் தாங்­கள் கடும் எச்­ச­ரிக்கை விடுத்­த­தா­க போலிஸ் தெரி­வித்­தது.

அதே­வே­ளை­யில், பல்­க­லைக்­கழகம் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது. பேரா­சி­ரி­யர் ஸெங்­கிற்கு எதி­ராக வேறு ஓர் ஊழி­யர் போலி­சில் புகார் செய்­த­தா­க­வும் தெரி­ய­வந்­தது.

ஆனால் மேல் நட­வ­டிக்கை எதுவு­மின்றி இந்த விவ­கா­ரத்தை போலிஸ் முடித்­துக்­கொண்­டது.