புதிய வடிவில் புத்தாக்க இந்தியக் கலையகத்தின் இணையத்தளம்

புதிய வடிவில் புத்தாக்க இந்தியக் கலையகத்தின் இணையத்தளம்

1 mins read
6853f3ae-68a6-435a-8de4-04775b875c5e
படம்: இணையப்பக்கத்திலிருந்து எடுத்தது -

புதிய வடிவமைப்பு கொண்ட முப்பரிமாண இணையத்தளத்தை புத்தாக்க இந்தியக் கலையகம் தொடங்கியுள்ளது. இதன் முகவரி: https://www.iiacsg.org

இந்த இணையத்தளத்தில் கலை, கணினியாக்கம், மொழி, நாட்டை மேம்படுத்தும் மின்னாக்க சிந்தனைகள், இருவழி உரையாடல், ஒலி, ஒளி படைப்புகள், நம் அன்றாட வாழ்க்கைக்கு வளமூட்டும் இணைய நடவடிக்கைள், மின்னியல் பயிற்சிகள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கலை விற்பன்னர்களின் படைப்புகள் என பலதரப்பட்ட உலகளாவிய இணையப்பதிவுகள் இடம்பெறும்.

மெய்நிகர் முப்பரிமாண காட்சி களோடு அவற்றைப் பற்றிய செய்முறை விளக்கங்களும் இணையத் தொடர்களாக இடம்பெறும்.

தொழில்முனைப்பை ஊக்குவிக்கும் வகையில், நேரடி விற்பனை நிகழ்ச்சிகள் இடம்பெறும். அவற்றில் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி, சமூக கலை உதவித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இளையவர் முதல் முதியவர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடி இணைய நிகழ்ச்சிகள், போட்டிகள், பகிர்வுகள், நமது படைப்பாளர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், கலைத்துறை செய்திகள், இருவழிச் செய்தி உரையாடல்கள் என பலதரப்பட்ட மின்னாக்க பரிணாமங்கள் அடங்கிய இணையத்தளம் நம்முடன் உலகக் கலைஞர்களை ஒன்றிணைப்பதுடன் மாற்றங்கண்டுள்ள நமது தற்கால வாழ்க்கையில் சமூக ஒன்றிணைப்பை வலுப்படுத்தும் கலை இணைய நடுவமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம்:

https://www.iiacsg.org

ஃபேஸ்புக்: https://www.facebook.com/iiacsgarts/

யூடியூப்: https://www.youtube.com/channel/UCLCr5rTIcxtk0UM65lq_W9g

டுவிட்டர்:

https://twitter.com/iiacsg

இன்ஸ்டகிராம்: https://www.instagram.com/iiacsg/

லிங்ட்இன்: https://www.linkedin.com/in/innovative-indian-arts-centre-ab52b11b6/