மழலையர் முகங்களில் பூக்கும் புன்னகையால் மனநிறைவடையும் செல்வி இளங்கோவன்

மழலையர் முகங்களில் பூக்கும் புன்னகையால் மனநிறைவடையும் செல்வி இளங்கோவன்

2 mins read
c68daefa-318a-4cf9-b9c3-436d11486a8d
பள்ளிக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் திருமதி செல்வி இளங்கோவன். படம்: E-Bridge பாலர் பள்ளி -

கிட்­டத்­தட்ட 24 ஆண்­டு­க­ள் பல் மருத்­துவ நிபு­ண­ராக பள்­ளி­களில் செயல்­பட்டு வந்­த­வர் திரு­மதி பி.செல்வி இளங்­கோ­வன். பழக்­கப்­பட்ட வேலை, நல்ல சம்­ப­ளம் என்­றா­லும் இதிலிருந்து மாறுபட்ட, புதிய அனு­ப­வத்தை தேடிச் செல்ல அவரது மனம் விரும்பியது. விருப்பம் வளர்ந்ததால் நான்காண்டுகளுக்கு முன்னர், வேலை­யி­லி­ருந்து விலகி உள­வி­யல் தொடர்­பான பட்­டப்­ப­டிப்பை ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு கற்கத் தொடங்கினார்.

தொடர்ந்து 2018ஆம் ஆண்­டில் வேலை குறித்து சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி வேலைவாய்ப்பு ஆலோ­ச­க­ரைச் சந்­தித்து பேசி­ய­தில், பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ரா­வ­தற்கு பொருத்­த­மாக இருப்­பார் என அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. அப்­போது ஒரு வேலைச் சந்­தைக்கு சென்று E-Bridge பாலர் பள்­ளி­யில் முழு­நேர ஆசி­ரி­யர் பணிக்கு விண்­ணப்­பித்­தார்.

"பிள்­ளை­க­ளு­டன் இன்­னும் அணுக்­க­மாகச் செயல்­ப­ட­லாம் என எண்­ணி­னேன். புதிய வேலை­யில் நிறைய கற்­றுக்­கொள்­ள­லாம் என்­ப­தில் திட­மாக இருந்­தேன்," என்று கூறி­னார் திரு­மதி செல்வி, 56.

பள்­ளி­யில் இணை ஆசி­ரி­ய­ராகச் சேர்ந்­த­ சில மாதங்­க­ளுக்­குப் பிறகு வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டத்­தில் (PCP) இடம்­பெ­றும் ஆரம்­பக்­கல்வி தொடர்­பான பட்­ட­யக்­கல்­வியை ஓராண்டு பயிலும் வாய்ப்பு அவ­ருக்குக் கிடைத்­தது.

இந்த நிபு­ணத்­துவ பட்­ட­யக்­கல்வி சான்­றி­தழ் ஊழி­ய­ரணி திறன்தேர்ச்சி திட்­டத்­தில் (WSQ) அங்­கீ­க­ரிக்­க­ப்ப­டு­கிறது. கடந்த ஆண்­டி­லி­ருந்து காலை­யில் பள்ளிக்கூட வேலைமுடிந்த பின்னர் மூன்று மணிநேர வகுப்­பு­க­ளுக்கு திரு­மதி செல்வி செல்­லத் தொடங்­கி­னார்.

மாணவர், ஆசிரியர் என்னும் இரு பொறுப்­பு­க­ளுக்கும் ஈடு­கொ­டுத்து ஓராண்டு முழுவதையும் சமா­ளிக்க தமக்கு வயது ஒரு தடை­யாக இருக்கவில்லை என்றார் அவர். பிள்­ளை­க­ளின் வளர்ச்சித் திறன்­களை மேம்­ப­டுத்­து­தல், வகுப்­பு­களை திறம்பட நடத்­து­தல், விளை­யாட்­டு­களை உரு­வாக்கு­தல் போன்ற உத்­தி­களை அவர் கற்றுக்­ கொண்­டார். பட்­ட­யக்­கல்­வியை முடித்து பள்ளியின் முழுநேர வேலைக்கு திரும்­பி­யுள்ள திரு­மதி செல்வி, பாலர் வகுப்பு முத­லாம் ஆண்டு மாண­வர்­க­ளுக்கு பாடம் நடத்தி வரு­கி­றார்.

வெளிப்­புற விளை­யாட்­டு­களில் ஈடு­

ப­டு­வது, ஆடல், பாடல் கற்றுக்­கொ­டுப்­பது, படைப்­பாற்­றலை வெளிக்­கொ­ண­ரச் செய்­வது என விருப்­பம்போல் புதிய பணி அமைந்­துள்­ளது என மனநிறைவு தெரி விக்கிறார் அவர். பிள்­ளை­க­ளோடு பிள்­ளை­யாக அவர்­க­ளு­டன் சேர்ந்து விளை­யா­டு­வது, கற்­பித்­த­லில் உற்சாகம் என ஆசி­ரி­யர் பணி­யை பேரார்­வத்­து­டன் தொடர்கிறார்.

"தின­மும் பிள்ளைகளுடன் உரை­யாடி, அவர்­களின் தன்­னம்­பிக்­கையை வளர்த்து, அவர்­கள் அடையவேண்டிய மேம்­பாட்­டிற்கு பங்காற்றுவதன் மூலம் மிகுந்த திருப்தி கிடைக்­கின்­றது," என்­றார்

திரு­மதி செல்வி.

திறந்த மனப்­பான்­மை­யு­டன், மிகுந்த ஆர்­வத்­து­டன் இத்­து­றை­யில் துணிச் சலாகக் கால்பதிக்­க­லாம் என்று கூறும் திரு­மதி செல்வி, வாழ்­நாள் கற்­ற­லுக்கு ஒரு சிறந்த எடுத்­து­காட்­டாக விளங்­கு­கி­றார்.

நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றபோதிலும் புதிய அனுபவங்களில் மனம் நாட்டம் கொண்ட தால் இன்று துடிப்புமிக்க பாலர் பள்ளி ஆசிரிய

ராக மாற்று வேலையில் மனநிறைவு கொள்கிறார் திருமதி செல்வி இளங்கோவன். பிள்ளைகளுடன் பேசி, பழகி, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் அடையவேண்டிய முன்னேற்றத்திற்கு தம்மாலும் பங்களிக்க முடிகிறது என்பதை எண்ணி மகிழ்கிறார் அவர். புதிய வேலை, புதிய அனுபவம், புன்னகை பூக்கும்

மழலை முகங்கள்... இன்னும் என்ன?... இதோ அவர் விரும்பிய புதிய பாதையின் பின்னணி!