கொவிட்-19 சமாளிப்பு; டிபிஎஸ் உலகிலேயே தலைசிறந்த வங்கி

கொவிட்-19 சமாளிப்பு; டிபிஎஸ் உலகிலேயே தலைசிறந்த வங்கி

1 mins read
d62db97e-46b4-4487-91ab-9df151e8457e
-

அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'குளோபல் பைனான்ஸ்' என்ற சஞ்சிகை, சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியை உலகிலேயே ஆகச் சிறந்த வங்கி என்று பெயர் குறிப்பிட்டுள்ளது.

உலகிலேயே தலைசிறந்த வங்கி என்று அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டு தொடர்ந்து மூன்றா வது ஆண்டாக இந்த உயரிய அங்கீகாரத்தை டிபிஎஸ் பெற்றது. கொவிட்-19 காலகட்டத்தில் மின்னிலக்க வங்கிச் சேவைகள் அதிகரித்தன. இந்தத் தேவையை நிறைவேற்ற ஆயத்த நிலையில் இருந்து மற்ற வங்கிகளுக்கு முன்னுதாரணமாக டிபிஎஸ் திகழ்கிறது என்று அந்தச் சஞ்சிகையின் வெளியிட்டாளரும் செய்தித்துறை இயக்கு நருமான ஜோசப் ஜிரோபுட்டோ தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் டிபிஎஸ் வங்கி மின்னிலக்கத்தில் பெரும் முதலீடு செய்து ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ளது. அந்த முதலீடுகள் பொருளியல் நிச்சயமில்லாத இப்போதைய காலகட்டத்தில் நன்கு கைகொடுக்கின்றன. அவை வங்கியின் மீள்திறனைப் பலப்படுத்தி உள்ளன. தேவை உள்ள நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க அவை உதவி இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இத்தகைய அங்கீகாரம் கிடைத்து இருப்பது சிங்கப்பூரை மறுபடியும் உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்து இருக்கிறது என்றும் இது இந்த வங்கிக்குப் பெருமையாக இருக்கிறது என்றும் டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா தெரிவித்தார்.